

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உச்ச நிலையை அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3.32 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,263 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 14.93 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளில் சேர்க்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் அனைவரையும் பாதித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்து செல்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை விவரங்களை மாவட்ட ரீதியாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதில் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் கையிருப்பு, வென்டிலேட்டர் வசதி போன்ற தகவல்களும் இடம் பெற்றுள்ளன. வலது பக்கத்தில் உள்ள தேடல் பகுதியில் உங்களுக்கு தேவையான மாவட்டத்தின் பெயரை டைப் செய்தால் அம்மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் விவரம் வரிசையாக வருகின்றன.
விவரத்தைத் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தை க்ளிக் செய்யவும்: https://stopcorona.tn.gov.in/beds.php