

உங்களுடன் விளையாடியது எனது வாழ்வின் சிறந்த தருணம் என்று தோனி குறித்து ராஜஸ்தானின் இளம் பந்துவீச்சாளர் சேத்தன் சகாரியா தெரிவித்துள்ளார்.
மும்பை வான்ஹடே மைதானத்தில் சிஎஸ்கே, ராஜஸ்தானுக்கு இடையே நடந்த போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. ராஜஸ்தானின் அறிமுகப் பந்துவீச்சாளர் சேத்தன் சகாரியா நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேத்தன் சகாரியா, சிஎஸ்கே கேப்டன் தோனியைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “சிறு வயது முதலே உங்களது விளையாட்டால் ஈர்க்கப்பட்டேன். தற்போது உங்களுடன் விளையாடுகிறேன். எனது வாழ்வின் சிறந்த தருணம் இது. இதனை நான் என்றும் கொண்டாடுவேன். உங்களைப் போல் எவரும் இல்லை. நன்றி” என்று தெரிவித்துள்ளார்.