ஹாட் லீக்ஸ்: திருமங்கலம்... நிதிக்கு திண்டாடும் மணி!

ஹாட் லீக்ஸ்: திருமங்கலம்... நிதிக்கு திண்டாடும் மணி!
Updated on
1 min read

திருமங்கலம் தொகுதியை மீண்டும் வென்றெடுக்க ஏகப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்துவைத்திருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இது தெரிந்திருந்தும் அவரை எதிர்த்து சேடபட்டியாரின் மகன் மணிமாறனை நிறுத்தி இருக்கிறது திமுக.

படை பலம் இருந்தாலும் உதயகுமாரின் பண பலத்தை சமாளிக்க முடியாமல் ரொம்பவே சிரமப்படுகிறாராம் மணிமாறன். தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கிய பிறகு, கொடைரோடு அருகே 100 ஏக்கரில் பண்ணைத் தோட்டம் அமைத்து அதைக் கவனித்து வருகிறார் மணிமாறனின் தந்தையான முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா.

தற்போது தேர்தல் செலவுகளுக்காக அதில் 25 ஏக்கரை விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் மணிமாறன். ஆனால், இடத்தை வந்து பார்ப்பவர்கள், இது சேடபட்டியார் வீட்டுச் சொத்து என்றதும் பாஸிட்டீவான பதிலைச் சொல்லாமல் பறந்து போய்விடுகிறார்களாம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in