தோசை சுட்டுக் கொடுத்து வாக்குச் சேகரித்த குஷ்பு

தோசை சுட்டுக் கொடுத்த குஷ்பு.
தோசை சுட்டுக் கொடுத்த குஷ்பு.
Updated on
1 min read

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குஷ்பு, சாலையோர உணவகத்தில் தோசை சுட்டுக் கொடுத்து வாக்குச் சேகரித்தார்.

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு, நுங்கம்பாக்கம் வடக்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 27) பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தார்.

அப்போது, மேள தாளத்துடன் நடனமாடி வந்துகொண்டிருந்த இளைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், சாலையோர உணவகத்தில் தோசை சுட்டுக் கொடுத்து அங்கு வந்தவர்களிடம் வாக்குச் சேகரித்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பாக, மருத்துவர் எழிலன் போட்டியிடுகிறார். குஷ்பு, எழிலன் இருவரும் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in