எலெக்‌ஷன் கார்னர்: எதிர்த்தாலும் நானே... கொடுத்தாலும் நானே!

எலெக்‌ஷன் கார்னர்: எதிர்த்தாலும் நானே... கொடுத்தாலும் நானே!
Updated on
1 min read

விளவங்கோட்டில் விஜயதரணிக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என காங்கிரஸ்காரர்களே முட்டிக்கொண்டு நின்றனர். தொகுதிக்குள் இருக்கும் 22 வட்டாரத் தலைவர்களும் சேர்ந்து விஜயதரணிக்கு எதிராக பிரஸ் மீட் எல்லாம் வைத்தும் பொங்கினர்.

‘மீண்டும் விஜயதரணிக்கு சீட் கொடுத்தால், ஒவ்வொரு கிராமத்திலும் காங்கிரஸ்காரர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு அவரை தோற்கடிப்போம்’ எனவும் அறிவித்திருந்ததால், உற்சாகமாய் இருந்தது பாஜக முகாம். ஆனால் இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி, சீட் வாங்கிவிட்டார் விஜயதரணி.

அத்துடன் தன்னை எதிர்த்த அத்தனை பேரையும் திரட்டிக் கொண்டுபோய் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததைப் பார்த்துவிட்டு பாஜக முகாம் ஆடிப்போய்விட்டது. அந்த அளவுக்கு சொந்தக் கட்சியினருக்கே ‘கவனிப்பு’ மேளா நடத்தி இருக்கிறாராம் தரணி.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in