எலெக்‌ஷன் கார்னர்: அழகிரியை எதிர்த்தார்... ஸ்டாலினை ரசித்தார்!

எலெக்‌ஷன் கார்னர்: அழகிரியை எதிர்த்தார்... ஸ்டாலினை ரசித்தார்!
Updated on
1 min read

2009 மக்களவைத் தேர்தலில் மதுரையில் மு.க.அழகிரியை எதிர்த்துப் போட்டியிட்டவர், தேமுதிகவின் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவியரசு. அந்தத் தேர்தலில் வெறும் 54 ஆயிரம் வாக்குகளை பெற்ற கவியரசு, என்றைக்காவது தனக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று காத்திருந்தார்.

இந்த நிலையில், அமமுகவுடன் தேமுதிக கைகோத்தது பிடிக்காமல் கட்சியைவிட்டு வெளியேறி, கடந்த 17-ம் தேதி மதுரை வந்த மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவாளர்கள் புடைசூழ திமுகவில் செட்டிலாகி விட்டார் கவி. “தேர்தல் முடியட்டும்... தேமுதிக கூடாரமே காலியாகிவிடும்” என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் கவியரசு.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in