புதுச்சேரி நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்: 14 ஆண்; 14 பெண் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

படம்: சாம்ராஜ்.
படம்: சாம்ராஜ்.
Updated on
1 min read

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை நாம் தமிழர் கட்சி தனித்து எதிர்கொள்கிறது. புதுச்சேரியில் உள்ள 28 தொகுதிகளிலும் இக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. 14 பெண்கள், 14 ஆண்கள் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், புதுச்சேரி ஏஎப்டி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று (மார்ச் 16) இரவு நடைபெற்றது.

வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

வேட்பாளர்களின் விவரம்:

1.திருபுவனை-ரஞ்சித்
2.தட்டாஞ்சாவடி-ரமே‌‌ஷ்
3.லாஸ்பேட்டை-நிர்மல் சிங்
4.காலாப்பட்டு-காமராஜ்
5.உருளையன்பேட்டை-கருணாநிதி
6.நெல்லித்தோப்பு-சசிகுமார்
7.முதலியார்பேட்டை-வேலவன்
8.அரியாங்குப்பம்-சுந்தரவடிவேலு
9.மணவெளி-இளங்கோவன்
10.ஏம்பலம்-குமரன்
11.பாகூர்-ஞானபிரகா‌‌ஷ்
12.திருநள்ளாறு-சிக்கந்தர் பாட்‌ஷா
13.காரைக்கால் (தெற்கு)-மரி அந்துவான்
14.நிரவி திருப்பட்டினம்-முகமது யூசுப்
.15.மண்ணாடிப்பட்டு-சித்ரா
16.ஊசுடு-கீதா பிரியா
17.மங்களம்-பாரத் கலை
18.வில்லியனூர்-பிரவீனா
19.உழவர்கரை-பிரியா
20.கதிர்காமம்-சுபஸ்ரீ
21.இந்திரா நகர்-தேவிகா
22.காமராஜ் நகர்-சர்மிளா பேகம்
23.முத்தியால்பேட்டை-பரிதாபேகம்
24.ராஜ்பவன்-அந்தோணி சர்மிளா
25.உப்பளம்-தேவி பிரியா
26.நெட்டப்பாக்கம்-கவுரி
27.காரைக்கால் நெடுங்காடு-நிவேதா
28.காரைக்கால் வடக்கு-அனுசுயா

வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான், "புதுச்சேரியில் இத்தனை ஆண்டுகள் ஆண்ட கட்சிகள் ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றத் தரவில்லை? மாஹே, ஏனாம் வேண்டாம். மாநில உரிமை வேண்டும். மாநில உரிமையை மறுக்கின்ற கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை. உங்களை நம்பித்தான் தனித்துப் போட்டியிடுகிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in