

மு.க.அழகிரி அறிமுகப்படுத்திய திருமங்கலம் ஃபார்முலாவை, அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோய்விட்டார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இம்முறையும் திருமங்கலத்திலேயே போட்டியிட திட்டமிட்டிருக்கும் அவர், தொகுதி மக்களுக்கான தேர்தல் கால கவனிப்பை முன்கூட்டியே தொடங்கிவிட்டார்.
தொகுதிக்குள் நடக்கும் காதுகுத்து, கல்யாணம் எதுவாக இருந்தாலும் அமைச்சர் போகாவிட்டாலும் அவரது ‘அன்பளிப்பு’ கவர் தட்டாமல் ஆஜராகிவிடுகிறது. அத்துடன், பள்ளிக் குழந்தைகள் முதல் பல்லுப்போன கிழவிகள் வரைக்கும் நலத்திட்ட உதவிகளை ‘சொந்தப்' பணத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார் உதயகுமார்.
ஜெயலலிதா பிறந்த நாளுக்கு வீடுகளில் விளக்கேற்றச் சொன்னது அதிமுக தலைமை. அமைச்சரோ தனது தொகுதியில் வீடுதோறும் பொங்கலிடச் சொல்லி அதற்கான அரிசி, பானை உள்ளிட்ட செலவையும் கொடுத்துவிட்டார். தேர்தல் நெருங்க நெருங்க கொண்டாட்டம் தான் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் திருமங்கலம் தொகுதி மக்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.