

கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமிக்கும் அமைச்சர் வேலுமணிக்கும் ஏழாம் பொருத்தம். அதிகார சாட்டை கையில் இருப்பதால் வேலுசாமிக்கு கட்சிக்குள் அணை போட்டு வைத்திருக்கிறார் வேலுமணி. இந்த நிலையில் முதல்வரின் கோவை விசிட்டின் போது செ.ம.வேலுசாமி முதல்வருக்கு முன்பாக ஓட நடக்க இருந்தது பலருக்கும் ஆச்சரியம்.
கோவை அதிமுகவில் இதுபற்றி விசாரித்தால், “ஒவ்வொரு பகுதியிலும் தனக்கே ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்க நினைக்கிறார் ஈபிஎஸ். அந்த வகையில் செ.ம.வேலுசாமியை இம்முறை பல்லடம் தொகுதியில் நிறுத்தி ஆளாக்குவது தான் அவரது பிளான். அதன் முன்னோட்டமாகத் தான் செ.ம. மீண்டும் ஆக்டீவ் ஆகி இருக்கிறார்.
இதையும் தெரிந்து கொண்ட வேலுமணி தரப்பு, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு அநியாயத்துக்கு பெயர் கெட்டுக் கிடப்பதாகச் சொல்லி அவரை பல்லடம் தொகுதிக்கு மாற்றிவிட்டு செ.ம - ஈபிஎஸ் பிளானுக்கு செக் வைக்கப் பார்க்கிறது” என்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.