

குமரி மாவட்டம், தோவாளை ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகுமார். மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவராகவும் இருக்கும் இவர் தளவாய் சுந்தரத்தின் உதவியாளரும்கூட. அண்மையில் கிருஷ்ணகுமார் சம்பந்தப்பட்ட வில்லங்க வீடியோ ஒன்று வெளியாகி முதல்வர் வரைக்கும் புகார் போனது. ஆனாலும் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை பாயாமல் பார்த்துக் கொண்டார் தளவாய்.
இந்நிலையில், தோவாளை யூனியன் சேர்மன் சாந்தினி, கிருஷ்ணகுமாருக்கு எதிராகத் தொடர்ந்து தளவாயிடம் புகார் சொல்லி வந்தாராம். இதற்காக கிருஷ்ணகுமாரைக் கூப்பிட்டு தளவாய் சுந்தரம் கண்டித்த நிலையில், திடீரென ஒன்றியச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கிருஷ்ணகுமார். தளவாய் தன்னை அழைத்து தாஜா செய்வார் என்று எதிர்பார்த்தே ராஜினாமா கடிதம் கொடுத்தாராம்.
ஆனால், ராஜினாமாவை ஏற்க வைத்ததுடன் அந்த ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து பொறுப்பாளர்களையும் நியமித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார் தளவாய். கூடிய சீக்கிரமே தோவாளையிலும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் பளிச்சிடலாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.