புதுக்கோட்டை மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள சசிகலா, பெங்களூருவில் இருந்து வரும் 8-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார். இவரை வரவேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அமமுகவினர் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். மேலும், போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

சசிகலாவைக் கட்சியிலேயே சேர்க்க மாட்டோம் எனக் கூறும் அதிமுகவைச் சேர்ந்தோர், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கறம்பக்குடி பகுதியில் தமிழக முதல்வர், துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் படங்களுடன், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கறம்பக்குடி இணைச் செயலாளர் ஆர்.ரங்கசாமி போஸ்டர் ஒட்டியுள்ளார்.

இதேபோன்று, ஆவுடையார்கோவில் பகுதியில் அதிமுக தீயத்தூர் பகுதி செயலாளர் ஏ.கருப்பையா, புதுக்கோட்டையின் பல்வேறு இடங்களில் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரணம் ஆறுமும் ஆகியோர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in