புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி!

‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் நிகழ்வு
புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி!
Updated on
1 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்​கும் ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி புதுச்​சேரி புஸ்ஸி வீதி​யிலுள்ள கம்​பன் கலை அரங்​கில் ஏப்.19-ம் தேதி காலை 9 மணிக்கு நடை​பெற உள்​ளது.

ஐஏஎஸ் படிக்க வேண்​டும் என்ற ஆசை பலருக்​கும் உண்​டு. ஆனால் அதற்​கான அடிப்​படைத் தேவை​யான கல்​வித் தகுதி என்ன, எத்தனை ஆண்​டு​கள் படிக்க வேண்​டும், அதி​கச் செல​வாகுமா என ஏராள​மான கேள்வி​களு​டன் தயங்கி நிற்​பவர்​களே அதி​கம்.

அவ்​வாறான தயக்​கத்​தைப் போக்​கி, யுபிஎஸ்சி தேர்​வுக்​குப் படிப்பதற்​கான தெளி​வைத் தரும் நோக்​கில் ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்​களுக்​காக நடத்​தப்​படு​கிறது.

இந்த நிகழ்ச்​சி​யில் புதுச்​சேரி மாவட்ட ஆட்​சி​யர் குலோத்​துங்​கன், புதுச்​சேரி முது​நிலை காவல் கண்​காணிப்​பாளர் (சட்​டம் ஒழுங்​கு) கலை​வாணன் ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாகப் பங்​கேற்று ஆலோ​சனை​களை வழங்​க​வுள்​ளனர்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முது​நிலை உதவி ஆசிரியர் மு.​முரு​கேசன், கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலை​வர் மற்​றும் மேலாண்மை இயக்​குநர் சத்யஸ்ரீ பூமி​நாதன் ஆகியோர் ஊக்கவுரையாற்ற இருக்​கிறார்​கள். காலை 9 மணிக்​குத் தொடங்​கும் இந்த நிகழ்ச்சி மதி​யம் ஒரு மணி வரை நடை​பெறும்.

இந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கும் அனை​வருக்​கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்​தாள், பாடத்​திட்​டக் கையேடு இலவச​மாக வழங்​கப்படும். மேலும் தேர்வு செய்​யப்​படும் 3 பேருக்கு இலவசப் பயிற்சியும் கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்​பில் வழங்​கப்பட உள்​ளது.

புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி!
விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in