சென்னை வர்த்தக மையத்தில் செப்.5, 6-ல் பேங்க் ஆஃப் பரோடா வழங்கும் ‘தி இந்து’ ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ 2026

சென்னை வர்த்தக மையத்தில் செப்.5, 6-ல் பேங்க் ஆஃப் பரோடா வழங்கும் ‘தி இந்து’ ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ 2026
Updated on
1 min read

சென்னை: நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில், ‘பேங்க் ஆஃப் பரோ​டா’ வழங்​கும் ‘தி இந்து ப்ராப்​பர்ட்டி எக்​ஸ்போ 2026’ செப். 5, 6-ம் தேதி​களில் காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடை​பெறவுள்​ளது.

45-க்​கும் மேற்​பட்ட முன்​னணி கட்​டு​மான நிறு​வனங்​களின் 200-க்​கும் மேற்​பட்ட திட்​டங்​கள் ஒரே இடத்​தில் காட்​சிப்​படுத்​தப்பட உள்​ளன.

அனு​மதி இலவசம்

‘தி இந்​து’ குழு​மத்​தால் ஏற்​பாடு செய்​யப்​பட்டு ‘பேங்க் ஆஃப் பரோ​டா’​வால் நடத்​தப்​படும் ‘ப்​ராப்​பர்ட்டி எக்​ஸ்போ 2026’, வீடு வாங்​கு​வோர், முதலீட்​டாளர்​கள் மற்​றும் இடம் தேடு​பவர்​களுக்​குப் பல்​வேறு வகை​யான ரியல் எஸ்​டேட் திட்​டங்​கள், முதலீட்டு வாய்ப்​பு​களை ஒரே இடத்​தில் கண்​டறி​யும் வாய்ப்பை வழங்​கு​கிறது.

இதன் மூலம், புதிய திட்ட அறி​முகங்​கள், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், வில்​லாக்​கள், மனை​கள், பண்ணை நிலங்​கள், தனி வீடு​கள், முதலீட்டு வாய்ப்​பு​கள் எனப் பலதரப்​பட்ட தேர்​வு​களைப் பார்​வை​யாளர்​கள் சென்னை மற்​றும் அதன் வளர்ந்து வரும் பகு​தி​களில் கண்​டறிய​லாம்.

பல கட்​டு​மான நிறு​வனங்​கள் பங்​கேற்​ப​தால், வீடு வாங்க விரும்​புவோர் திட்​டப் பிர​தி​நி​தி​களு​டன் நேரடி​யாக உரை​யாட​வும், திட்​டத்​தின் சிறப்​பம்​சங்​களைத் தெரிந்து கொள்​ள​வும், இடங்​கள் மற்​றும் அமைப்​பு​களை ஒப்​பிட்​டுப் பார்க்​க​வும், விலையை மதிப்​பிட​வும், பல்​வேறு பிரிவு​களில் உள்ள வாய்ப்​பு​களை ஆராய​வும் முடி​யும்.

நிகழ்ச்​சி​யில் கிரெ​டாய் (CREDAI) சென்​னை​யின் தலை​வர் மெஹுல் எச்​.தோஷி சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​கிறார்.

கிரெ​டாய் சென்​னை​யின் செய​லா​ளர் சுமன் வூரா, பேங்க் ஆஃப் பரோ​டா​வின் தலை​மைப் பொது மேலா​ளர் எம்​.ர​வீந்​திர ராய் ஆகியோர் கவுரவ விருந்​தினர் களாகப் பங்​கேற்​கின்​றனர்.

‘தி இந்​து’ ப்ராப்​பர்ட்டி

எக்​ஸ்போ 2026, சென்​னை​யில் வீடு வாங்க விரும்​புவோர் தங்​கள் தேவை​களுக்கு ஏற்ற இடத்​தைக் கண்​டறிவதற்​கான அடுத்​தகட்ட நடவடிக்​கையை மேற்​கொள்ள ஒரு சிறந்த வாய்ப்​பை வழங்​கு​கிறது.

(Link: newsth.live/PFC2026PA)

சென்னை வர்த்தக மையத்தில் செப்.5, 6-ல் பேங்க் ஆஃப் பரோடா வழங்கும் ‘தி இந்து’ ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ 2026
டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in