விஐடி, இந்து தமிழ் திசை, அறிவியல் இயக்கம் சார்பில் ‘நாளைய விஞ்ஞானி 2025’ அறிவியல் திருவிழா

சென்னையில் நாளை நடைபெறுகிறது
எஸ்.வின்சென்ட், சிவராஜா ராமநாதன்

எஸ்.வின்சென்ட், சிவராஜா ராமநாதன்

Updated on
1 min read

சென்னை: விஐடி சென்னை உடன் இணைந்து, ‘இந்து தமிழ் திசை’ - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி 2025’ எனும் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வு மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது.

சென்னை மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு நாளை (பிப். 8) காலை 9 மணிக்கு சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கண்டிகையில் உள்ள விஐடி சென்னை வளாகத்தில் நடைபெறுகிறது.

மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் அறிவியல் திறனை வெளிக்கொணரும் வகையிலும் நடைபெறும் இந்த நிகழ்வில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆன்லைனில் பதிவு செய்துள்ள பள்ளி மாணவ-மாணவர்கள், நேரில் ஆய்வை சமர்ப்பிக்க உள்ளனர்.

சென்னை மண்டல அளவிலான இந்த நிகழ்வை, நாளை காலை 10 மணியளவில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் உறுப்பினர்-செயலர் டாக்டர் எஸ்.வின்சென்ட் தொடங்கிவைத்துப் பேசுகிறார்.

மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் முதன்மை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்குப் பரிசு வழங்குகிறார். இவ்விரு நிகழ்வுகளிலும் விஐடி சென்னை கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன், இயக்குநர் முனைவர் கே.சத்தியநாராயணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.

பதிவு செய்யாத மாணவர்கள்... ஆன்லைனில் பதிவு செய்யாத மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால், நிகழ்வன்று நேரில் வந்து பதிவு செய்து, ஆய்வை சமர்ப்பிக்கலாம். பங்கேற்க விரும்புவோர் 9944029700 என்ற எண்ணில் தகவல் தெரிவித்துவிட்டு, நிகழ்வுக்கு நேரில் வந்து பங்கேற்கலாம்.

<div class="paragraphs"><p>எஸ்.வின்சென்ட், சிவராஜா ராமநாதன்</p></div>
மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம் பிப்.16-ல் திறப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in