

படம்: ம.பிரபு
'இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்தும் 'நம்ம சென்னை பிராப்பர்ட்டி ஃபேர் - 2026' என்ற 2 நாள் வீட்டு வசதி கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
'இந்து தமிழ் திசை' நாளிதழும், ஐ ஆட்ஸ் & ஈவென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும், 'நம்ம சென்னை பிராப்பர்ட்டி ஃபேர் 2026 என்ற வீட்டு வசதி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை ஆதித்யா ராம் குழுமத்தின் விற்பனை பிரிவு உதவி மேலாளர் ஜெ.ஸ்ரீனிவாசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சிக்கு பங்கு தாரராக ஆதித்யா ராம் குழுமம், இணை பங்கு தாரராக அபி எஸ்டேட் நிறுவனம் ஆகியவை செயல்படுகின்றன.
தொடக்க விழாவில், ஆதித் யாராம் குழுமத்தின் விளம்பரம் மற்றும் சந்தைப் படுத்துதல் பிரிவு மேலாளர் ராகுல் ராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ரமேஷ் ராஜா, அபி எஸ்டேட் மேலாளர் யுவ ராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி என்.முரளிதரன், பாங்க் ஆஃப் பரோடாவின் சில்லறை கடன் செயலாக்க மைய (ஆர்ஏபிசி) முதன்மை மேலாளர் மித்ரா ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சியில், அடுக் குமாடி குடியிருப்புகள், மனைகள், பட்ஜெட் வீடுகள், சொகுசு வில்லாக்கள், வரிசை வீடுகளுக்காக ஆதித்யா ராம் குழுமம், அபி எஸ்டேட், ஜி- ஸ்கொயர் உள்ளிட்ட பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்கள், வீட்டு கடன் வழங்க பாங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகள் என 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப் படுகிறது. பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு, தங்களுடைய கனவு இல்லத்தை நனவாக்கிக் கொள்ளலாம். கண்காட்சி குறித்து, பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியதாவது:
ஆதித்யாராம் குழுமத்தின் உதவி மேலாளர் (விற்பனை) ஜெ.ஸ்ரீனிவாசன்: கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதித் யாராம் நிறுவனம், ரியல் எஸ் டேட் துறையில் 30 ஆண்டுகால அனுபவத்துடன் வீட்டுமனை, வில்லா திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம். இந்த முறை கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்), ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் அதிநவீன வசதி களுடன் கூடிய வில்லாக்கள் ரூ.4 கோடி முதல் ரூ.8 கோடி வரையிலும், வில்லா மனைகள் ரூ.40 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும், புதிய மனைப் பிரி்வின் ஆரம்ப விலை ரூ.2 கோடி யாகவும் நிர்ணயிக்கப்பட்டு பல் வேறு புதிய குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
அபி எஸ்டேட் நிறுவனத்தின் பிஆர்ஓ என்.முரளிதரன்: வீட்டு வசதி கண்காட்சிகளில் தொடர்ச்சியாக நாங்கள் பங் கேற்று வருகிறோம். ரியல் எஸ்டேட் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அபி எஸ்டேட் நிறுவனம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 144 திட்டங் களை நிறைவு செய்துள்ளது. எங்களது அனைத்து திட்டங் களும் சிஎம்டிஏ மற்றும் நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குநரகம் அங்கீகாரம் பெற்றவை யாகும். தாம்பரம், வண்டலூர், ஆதனூர் மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் அமைந்துள்ள எங்களது குடியிருப்புகள், மனைகள் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப சதுர அடி ஆயிரம் ரூபாய் முதல் ரூ.4,990 வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் போக்குவரத்து வசதி நிறைந்த பகுதிகளாகும்.
பாங்க் ஆஃப் பரோடா ஆர்ஏபிசி பிரிவு முதன்மை மேலாளர் மித்ரா ராம்: வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், தனி வீடுகள் மற்றும் மனை வாங்கி வீடு கட்டுவதற்கான கடன்களை வழங்கி வருகிறோம். மேலும். அடமானக் கடன் பிரிவின் கீழ், தனி வீடு கள், வணிக கட்டிடங்கள் மற்றும் நிலங்களுக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், வீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் பரிசீலனை எளிதாக்கப்பட்டு, அதிகபட்சமாக 3 முதல் 4 வேலை நாட்களுக்குள் கடன் ஒப்புதல் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.