சென்னையில் நாளை ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி

இந்து தமிழ் திசை - கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் நிகழ்வு
சென்னையில் நாளை ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி
Updated on
1 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்​கும் ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழி​காட்டு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நாளை (மே 24) காலை 9 மணிக்கு நடை​பெற உள்​ளது.

ஐஏஎஸ் படிக்க வேண்​டும் என்ற ஆசை பலருக்​கும் உண்​டு. ஆனால், அதற்​கான அடிப்​படைத் தேவை​யான கல்​வித் தகுதி என்ன, எத்​தனை ஆண்​டு​கள் படிக்க வேண்​டும், அதிக செல​வாகுமா என ஏராள​மான கேள்வி​களு​டன் தயங்கி நிற்​பவர்​களே அதி​கம்.

அவ்​வாறான தயக்​கத்​தைப் போக்​கி, யுபிஎஸ்சி தேர்​வுக்​குப் படிப்​ப​தற்​கான தெளி​வைத் தரும் நோக்​கில் ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்​களுக்​காக நடத்​தப்​படு​கிறது.

இறையன்​பு,  வெ.​திருப்​பு​கழ்

இறையன்​பு, வெ.​திருப்​பு​கழ்

இந்த நிகழ்ச்​சி​யில், தமிழக அரசின் மேனாள் தலை​மைச் செய​லா​ளர் இறையன்​பு, தேசி​யப் பேரிடர் மேலாண்மை ஆணை​யத்​தின் மேனாள் ஆலோ​சகர் வெ.​திருப்​பு​கழ், ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாகப் பங்​கேற்று ஆலோ​சனை​களை வழங்​க​வுள்​ளனர்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நிகழ்வு ஒருங்​கிணைப்பு & விற்​பனை பிரிவு உதவிப் பொது​மேலா​ளர் மு.​முரு​கேசன், கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலை​வர் மற்​றும் மேலாண்மை இயக்​குநர் சத்​ய பூமி​நாதன் ஆகியோர் ஊக்​க​வுரை​யாற்ற இருக்​கிறார்​கள்.

காலை 9 மணிக்​குத் தொடங்​கும் இந்த நிகழ்ச்சி மதி​யம் ஒரு மணி வரை நடை​பெறும். இந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கும் அனை​வருக்​கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்​தாள், பாடத்​திட்​டக் கையேடு இலவச​மாக வழங்​கப்​படு​கிறது. மேலும் தேர்வு செய்​யப்​படும் 3 பேருக்கு இலவசப் பயிற்​சி​யும் கிங்​மேக்​கர்​ஸ் ஐஏஎஸ் அகாட​மி சார்​பில்​ வழங்​கப்​பட உள்​ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க  விரும்புவோர் இத்துடன் உள்ள க்யூஆர் குறியீட்டை  ஸ்கேன் செய்து, பதிவு செய்துகொள்ளவும். கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள 9444227273 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இந்நிகழ்வில் பங்கேற்க  விரும்புவோர் இத்துடன் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, பதிவு செய்துகொள்ளவும். கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள 9444227273 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

சென்னையில் நாளை ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ-மைனிங் திட்டம் மூலம் 94 ஏக்கர் நிலம் மீட்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in