சில்க் மார்க் இந்தியா அமைப்புடன் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் ‘என்னோட முதல் பட்டு’

சிறப்பான பட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவர்களுக்குப் பரிசு
சில்க் மார்க் இந்தியா அமைப்புடன் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் ‘என்னோட முதல் பட்டு’
Updated on: 
1 min read

சென்னை: ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பட்டு வாரியத்தின் ஒரு முன்னெடுப்பான சில்க் மார்க் இந்தியா (Silk Mark Organisation of India) அமைப்பும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து ‘என்னோட முதல் பட்டு’ எனும் அனுபவப் பகிர்வினை நடத்துகின்றன.

இதில் நீங்கள் அணிந்த முதல் பட்டு குறித்த அனுபவங்களைச் சிறப்பாக பகிர்ந்து கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

பட்டு முத்திரைச் சான்று மூலம் பட்டின் தூய்மையை உறுதிப்படுத்தி நுகர்வோரைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சில்க் மார்க் இந்தியா அமைப்பானது, பட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்த்தல், பட்டுத்தொழில் மதிப்புச் சங்கிலியில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஆதரவளித்தல், இந்தியாவின் வளமான பட்டுப் பாரம்பரியத்தைப் போற்றுதல் ஆகியவற்றுடன், மரபுகளைப் பாதுகாத்தல், வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் உண்மையான இந்தியப் பட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை முன்னெடுத்து செயலாற்றி வருகிறது.

இந்த நோக்கங்கள் குறித்த விழிப்புணர்வை நுகர்வோர்களிடத்தில் ஏற்படுத்தும் எண்ணத் தோடு ‘என்னோட முதல் பட்டு’ எனும் அனுபவப் பகிர்வினை நடத்துகிறது.

அம்மா மகளுக்கு, மகள் அம்மாவுக்கு, கணவர் மனைவிக்கு, பாட்டி பேத்திக்கு வழங்கிய முதல் பட்டுப்புடவையை நீங்கள் அணிந்துகொண்ட அந்த இனிய நினைவுகள் குறித்தும், மகன் அப்பாவுக்கு வழங்கிய முதல்பட்டு வேட்டியை அணிந்துகொண்ட அனுபவத் தையும் சுருக்கமாக எழுத வேண்டும். சிறப்பான அனுபவங்களுக்கு பரிசுகள் உண்டு.

நீங்கள் எழுதிய அனுபவத்தோடு, அந்தப் பட்டினை அணிந் திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து, இத்துடன் உள்ள க்யூஆர்கோடில் அனுப்பி வைக்க வேண்டும்.

உங்களின் சமூக வலைதளப்பக்கத்திலும் அதைப் பதிவுசெய்து, எங்களுக்கு ஹேஷ்டேக் (Hashtag: #EnnodaMuthalPattu #SilkMark #HinduTamil #PureSilk #IndianSilk #MyFirstSilk) செய்யுங்கள்.

நவ.3-ம் தேதிக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9944029700 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

சில்க் மார்க் இந்தியா அமைப்புடன் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் ‘என்னோட முதல் பட்டு’
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற 8-ம் வகுப்பு மாணவர்கள் நவ.3-க்குள் விண்ணப்பிக்கலாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in