

சென்னை: ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பட்டு வாரியத்தின் ஒரு முன்னெடுப்பான சில்க் மார்க் இந்தியா (Silk Mark Organisation of India) அமைப்பும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து ‘என்னோட முதல் பட்டு’ எனும் அனுபவப் பகிர்வை நடத்துகின்றன.
முதல் பட்டு ஆடை குறித்த அனுபவங்களைச் சிறப்பாக பகிர்ந்துகொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. பட்டு முத்திரைச் சான்று மூலம் பட்டின் தூய்மையை உறுதிப்படுத்தி நுகர்வோரைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சில்க் மார்க் அமைப்பானது, பட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்த்தல், பட்டுத் தொழில் மதிப்புச் சங்கிலியில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஆதரவளித்தல், இந்தியாவின் வளமான பட்டுப் பாரம் பரியத்தைப் போற்றுதல், உண்மையான இந்தியப் பட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை முன்னெடுத்து செயலாற்றி வருகிறது.
இந்த நோக்கங்கள் குறித்த விழிப்புணர்வை நுகர்வோர்களிடத்தில் ஏற்படுத்தும் எண்ணத்தோடு இந்த ‘என்னோட முதல் பட்டு’ எனும் அனுபவப் பகிர்வை நடத்துகிறது.
உங்களுக்கு பிறர் வழங்கிய முதல் பட்டுப்புடவை, வேட்டியை நீங்கள் அணிந்துகொண்ட அந்த இனிய நினைவுகள் குறித்த அனுபவத்தை சுருக்கமாக எழுத வேண்டும். சிறப்பான அனுபவங்களுக்கு பரிசுகள் உண்டு.
நீங்கள் எழுதிய அனுபவத்தோடு, அந்தப் பட்டு ஆடையை அணிந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து, இத்துடன் உள்ள க்யூஆர் குறியீட்டில் அனுப்பி வையுங்கள்.
உங்களின் சமூக வலைபக்கத்திலும் அதனைப் பதிவுசெய்து, எங்களுக்கு ஹேஷ்டேக் (Hashtag: #EnnodaMuthalPattu #SilkMark #HinduTamil #PureSilk #IndianSilk #MyFirstSilk) செய்யுங்கள்.
வரும் 2026 நவம்பர் 3-ம் தேதிக்குள் பகிர்ந்துகொள்ளவும். கூடுதல் விவரங்களைப் பெற 9944029700 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.