தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: 19 மாவட்டங்களில் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: 19 மாவட்டங்களில் கனமழை
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் தூத்​துக்​குடி உள்​பட 3 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்று (அக்.21) மிக கனமழையும், 19 மாவட்​டங்​களில் கனமழையும் பெய்​யக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது​குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய உயரதி​காரியும், விஞ்​ஞானியுமான வி.ஆர்.துரை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​கள் மற்​றும் அதனை ஒட்​டிய தமிழக கடலோர பகுதி​களின் மேல் ஒரு வளிமண்​டல சுழற்சி நில​வு​கிறது. இத​னால், அடுத்த 24 மணி நேரத்​தில் ஒரு குறைந்த காற்​றழுத்​தத் தாழ்​வு​ப் ​பகுதி அதே பகுதி​யில் உரு​வாக வாய்ப்​புள்​ளது.

மேலும், வடக்கு கடலோர ஆந்​திரா பகுதி​கள் வரை ஒரு காற்​றழுத்​தத் தாழ்வு பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக, அக்.21-ம் தேதி (இன்று) தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னியாகுமரி ஆகிய 3 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும்.

நீல​கிரி, கோயம்​புத்​தூர், ஈரோடு, திருப்​பூர், நாமக்​கல், கரூர், தேனி, திண்​டுக்​கல், தென்​காசி, மதுரை, விருதுநகர், புதுக்​கோட்டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை, சிவகங்கை, ராம​நாத​புரம் ஆகிய 19 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகுதி​களி​லும் கனமழை பெய்​யக்​கூடும். ஏனைய தமிழகத்​தில் அநேக இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

அக்.22-ம் தேதி தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னியாகுமரி, தென்​காசி, விருதுநகர், ராம​நாத​புரம் ஆகிய 6 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும். நீல​கிரி, கோயம்​புத்​தூர், தேனி, திண்​டுக்​கல், மதுரை, சிவகங்கை, புதுக்​கோட்டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, அரியலூர், கடலூர், விழுப்​புரம் ஆகிய 14 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகுதி​களி​லும் கனமழை பெய்​யக்​கூடும். ஏனைய தமிழகத்​தில் அநேக இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும். அக்.23-ம் தேதி 25 மாவட்​டங்​கள், அக். 24-ம் தேதி 20 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் புதுச்​சேரி மற்​றும் காரைக்​காலிலும் கனமழை பெய்​யக்​கூடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in