

தீபாவளிக் கொண்டாட்டம் நெருங்கி வருகிறது. வட அமெரிக்கா முழுவதும் உள்ள வீடுகளில் உணவு, குடும்பம், மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை மையமாகக் கொண்டு கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகள் தொடங்கியுள்ளன. இதை மேலும் சிறப்பாக்கும் வகையில் லக்ஷ்மி நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகப் பிரபல சமையல் கலைஞர் செப் குணால் கபூருடன் இணைந்து ‘தீபாவளி டிலைட்ஸ்’ சீசன் 2 என்ற ஆறு அத்தியாயங்களைக் கொண்ட யு-டியூப் சமையல் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, செப் குணால் கபூர் மீண்டும் எளிமையான சமையல் குறிப்புகளுடன் திரும்பியுள்ளார். பாரம்பரிய தீபாவளி உணவுகளுடன் நவீன சமையல் முறைகளை இணைத்து, புதுமையான சுவைகளை அறிமுகப்படுத்துகிறார். செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கிய இத்தொடரில், லக்ஷ்மியின் தரமான தயாரிப்புகளைப் பயன்படுத்தி, பாரம்பரிய தீபாவளி உணவுகளுடன் நவீன சமையல் முறைகளை இணைக்கும் எளிமையான, சுவையான ப்யூஷன் உணவு வகைகள் இடம் பெறுகின்றன.
இந்த தொடரைக் காண...
“லக்ஷ்மி நிறுவனத்துடன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பான அனுபவம். தீபாவளி என்பது குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றுகூடி, பாரம்பரியத்தைக் கொண்டாடி, சுவையான உணவுகளை ரசிக்கும் தருணமாகும். லக்ஷ்மியின் தரமான, பாரம்பரியச் சுவைமிக்க தயாரிப்புகள் மூலம், அந்த மகிழ்ச்சியை எளிமையான, புதுமையான மற்றும் அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் குடும்பங்களிடம் கொண்டு சேர்க்கிறோம். தரத்துடனும் பாரம்பரியத்துடனும் கொண்டாடுவதற்கு, 'லக்ஷ்மி ஹை நா!” என்கிறார் செப் குணால் கபூர்.
இதனுடன், 'Dream Big, Win Bigger This Festival!' என்ற தீபாவளி பரிசுப் போட்டியையும் லக்ஷ்மி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த முறை இந்த போட்டியில் பங்கேற்ற நியூ ஜெர்சியை சேர்ந்த உதயகுமார் சொகுசு காரை வென்றார்.
அவரின் அனுபவம் பற்றிய வீடியோ...
இதில் சொகுசு கார், தங்க நாணயங்கள், ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதில் பங்கேற்பது மிகவும் எளிது. லக்ஷ்மி தயாரிப்புகளில் ஒன்றை வாங்கி, பரிசுப் போட்டியில் பங்கேற்பதற்கான வழிமுறைகளின்படி பதிவு செய்தால் போதும். இந்தத் தீபாவளியில் அடுத்த அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் நீங்களாகவும் இருக்கலாம்!
இந்தாண்டு போட்டியில் பங்கேற்க... > https://laxmihos.com/dream-big-win-bigger-this-festival
“கடந்த ஆண்டின் வெற்றியைத் தொடர்ந்து, செப் குணால் கபூருடன் மீண்டும் இணைந்து இந்தப் பரிசுப் போட்டியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வட அமெரிக்கா முழுவதும் உள்ள குடும்பங்களின் தீபாவளிக் கொண்டாட்டங்களில் அன்பு, மகிழ்ச்சி மற்றும் தரமான லக்ஷ்மி தயாரிப்புகளைக் கொண்டு உருவாக்கப்படும் சுவையான இந்திய ப்யூஷன் உணவு வகைகளை இணைப்பதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்” என்று லக்ஷ்மி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் சுஹாசினி பாட்டீல் தெரிவித்துள்ளார்.
1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லக்ஷ்மி நிறுவனம், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக வட அமெரிக்க வீடுகளுக்கு பாரம்பரிய தெற்காசிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. சமையல், குடும்ப ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை முன்னிறுத்தி, இந்தத் தீபாவளியை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவதே இக்கூட்டணியின் நோக்கமாகும்.
பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவின் 50 மாநிலங்கள் அல்லது கொலம்பியா மாவட்டத்தில் (D.C.) வசிக்கும், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இப்பகுதிகளுக்கு வெளியிலோ அல்லது இப்போட்டி தடைசெய்யப்பட்ட இடங்களிலோ இது செல்லுபடியாகாது. போட்டி 09/01/26 அன்று நள்ளிரவு 12:00:01 மணிக்கு (ET) தொடங்கி, 12/31/26 அன்று இரவு 11:59:59 மணிக்கு (ET) முடிவடையும்.
அனைத்துப் பரிசுகளின் மொத்த உத்தேச சில்லறை மதிப்பு (ARV): $78,460. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள், ஒவ்வொரு குலுக்கலுக்கும் பெறப்படும் பதிவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். வரம்பு: ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் பத்து (10) பதிவுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். முழுமையான அதிகாரப்பூர்வ விதிகளை அறிய www.laxmihos.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். ஏற்பாட்டாளர்: ஹவுஸ் ஆஃப் ஸ்பைசஸ் இந்தியா இன்க்., 3000 மார்கஸ் அவென்யூ, சூட் 2W10, லேக் சக்சஸ், NY 11042.