ரயில் டிக்கெட்டுகளுக்கு ரூ.2,027 வரை கேஷ்பேக் வழங்கும் விண்டர் ஹாலிடே எக்ஸ்பிரஸ் சலுகை: ConfirmTkt அறிவிப்பு

ரயில் டிக்கெட்டுகளுக்கு ரூ.2,027 வரை கேஷ்பேக் வழங்கும் விண்டர் ஹாலிடே எக்ஸ்பிரஸ் சலுகை: ConfirmTkt அறிவிப்பு
Updated on: 
1 min read

பெங்களூரு: ரயில் டிக்கெட் முன்பதிவு தளமான ConfirmTkt தனது விண்டர் ஹாலிடே எக்ஸ்பிரஸ் சலுகை மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ.2,000 வரை கேஷ்பேக் பெறலாம் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: “ConfirmTkt தனது விண்டர் ஹாலிடே எக்ஸ்பிரஸ் சலுகையை அறிவித்துள்ளது. நிறுவனம் இதுவரை வழங்கிய மிகப் பெரிய கேஷ்பேக் சலுகைகளில் இதுவும் ஒன்று. 

விண்டர் ஹாலிடே எக்ஸ்பிரஸ் சலுகையின் மூலம், தகுதியான ரயில் டிக்கெட் முன்பதிவுகளுக்கு பயணிகள் ரூ.2,027 வரை கேஷ்பேக் பெறலாம். கேஷ்பேக்குடன், தலா ரூ.70 மதிப்புள்ள இரண்டு இலவச மெட்ரோ டிக்கெட்டுகள் மற்றும் ரயிலில் இலவச உணவு ஆகியவையும் இந்தச் சலுகையில் அடங்கும். இதனால் பயணத்தின்போது கூடுதலாகச் சேமிக்க முடியும்.

2026 நவம்பர் 18 முதல் 30 வரை இந்தச் சலுகை கிடைக்கும். 2026 டிசம்பர் 22 முதல் 2027 ஜனவரி 5 வரை திட்டமிடப்பட்ட ரயில் பயணங்களுக்கு இந்தச் சலுகையைப் பெறுவதற்கான கூப்பன் குறியீடு WINTER.

இந்தச் சலுகை குறித்துப் பேசிய ixigo Trains மற்றும் ConfirmTkt தலைமைச் செயல் அதிகாரி தினேஷ் குமார் கோதா கூறுகையில், “விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும், புதிய இடத்துக்குச் செல்வதாக இருந்தாலும், லட்சக்கணக்கான இந்தியர்கள் ஆண்டிறுதிப் பயணங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த ஆண்டு, இதுவரை நாங்கள் வழங்கிய மிகப் பெரிய கேஷ்பேக் சலுகைகளில் ஒன்றைப் பயணிகளுக்குக் கொண்டுவருகிறோம். விடுமுறைப் பயணங்களின் செலவைக் குறைப்பதோடு, பயணிகள் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணங்களை மேற்கொள்ள அவர்களை மேலும் ஊக்குவிக்க விரும்புகிறோம்.” என்றார்.

இந்தச் சலுகையைப் பெற, பயணிகள் ConfirmTkt செயலியைப் பதிவிறக்கம் செய்து, 2026 டிசம்பர் 22 முதல் 2027 ஜனவரி 5 வரையிலான பயணங்களுக்குத் தகுதியான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்தும்போது WINTER என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தலாம். கேஷ்பேக் தொகையும் கூடுதல் பலன்களும் சலுகைக்கான விதிமுறைகள் மற்றும் தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.

ixigo பற்றி (NSE: IXIGO, BSE: 544192)

அலோக் பாஜ்பாய் மற்றும் ரஜ்னிஷ் குமார் ஆகியோரால் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ixigo (Le Travenues Technology Limited), செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முன்னணி பயணத் தளமாகும். ரயில், விமானம், பேருந்துப் பயணங்கள் மற்றும் ஹோட்டல் தங்குமிடங்களைத் திட்டமிடவும், முன்பதிவு செய்யவும், நிர்வகிக்கவும் தினமும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு ixigo, ConfirmTkt மற்றும் Abhibus செயலிகள் உதவுகின்றன. 2026 நிதியாண்டில் ixigo தளத்தை 57 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தினர். பயனர் எண்ணிக்கையின் அடிப்படையில், ixigo இந்தியாவின் முன்னணி பயணத் தளமாக விளங்குகிறது. மேலும் தகவலுக்கு www.ixigo.com இணையதளத்தைப் பார்வையிடவும்.

ரயில் டிக்கெட்டுகளுக்கு ரூ.2,027 வரை கேஷ்பேக் வழங்கும் விண்டர் ஹாலிடே எக்ஸ்பிரஸ் சலுகை: ConfirmTkt அறிவிப்பு
இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வளரும்: எஸ் அண்ட் பி கணிப்பு

X