

புதுடெல்லி: எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ், ஆசிய, பசிபிக் பிராந்திய நாடுகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
2027-ல் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.4% ஆக இருக்கும். இந்த பிராந்தியத்தில் இந்தியாவும், வியட்நாமும் அதிவேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதாரங்களாக உள்ளன. எல்நினோ
பாதிப்பால் இந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் வேளாண் சாகுபடி பாதிக்கப்படக்கூடும்.
எனினும் பல்வேறு சவால்களை தாண்டி நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.