காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுக ஆணையத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2026’ நிறைவு

‘இந்து தமிழ் திசை’யுடன் இணைந்து நடத்திய போட்டிக்கான பரிசளிப்பு விழா
காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுக ஆணையத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2026’ நிறைவு
Updated on: 
2 min read

சென்னை: மத்​திய விழிப்புணர்வு ஆணை​யத்​தின் உத்​தரவு​களின்​படி, காமராஜர் துறை முகமும் சென்னை துறைமுகமும் நடத்திய ‘கண்​காணிப்பு விழிப்​புணர்வு வாரம் - 2026’ முன்​னிட்டு கடந்த அக்.26 முதல் நவ.1-ம் தேதி வரை கண்​காணிப்பு விழிப்​புணர்வு வாரத்தை கடைபி​டித்​தன.

இதன் முன்​னோட்​ட​மாக ஆக. 17 முதல் நவ. 16-ம் தேதி வரை நடைபெற்ற 3 மாத கால விழிப்​புணர்வு பிரச்​சா​ரத்​தின்​போது நேர்மை, ஊழல் தடுப்பு குறித்து துறைமுக அதி​காரி​களுக்கு பல்வேறு பயிற்சி பட்​டறைகளும் தமிழ், ஆங்​கிலம் மற்​றும் இந்தி மொழிகளில் கட்டுரை, வாசகம் எழுது​தல் மற்றும் விநாடி-வினா போட்​டிகளும் நடத்​தப்​பட்​டன.

இளைய தலைமுறை​யினர் மற்​றும் பொது​மக்​களிடையே விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் வகை​யில், பொன்​னேரி லோகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்​லூரி மாணவர்​கள் மற்​றும் துறைமுக ஊழியர்​கள் இணைந்து ஊழலுக்கு எதிரான விழிப்​புணர்வு நடை​பயணத்​தை நடத்​தினர்.

வெளிப்​புற தொடர்பு நட​வடிக்​கைகளின் ஒரு பகுதி​யாக பள்ளி, கல்​லூரி மாணவர்​கள், ஆசி​ரியர்​களுக்​கான கட்​டுரை எழுதும் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, போஸ்​டர் தயாரிப்பு போட்​டிகளும் நடத்​தப்​பட்​டன. இதன் நிறைவு விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

காம​ராஜர் மற்​றும் சென்னை துறைமுகங்​களின் தலை​வர் சச்​சின் எஸ்.குர்வே, தலைமை கண்​காணிப்பு அதி​காரி பி.அனுக்​கிரஹா, காம​ராஜர் துறைமுகத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஜே.பி.ஐரீன் சிந்​தியா, சென்னை துறைமுகத்​தின் துணைத் தலை​வர் எஸ்.விஸ்வநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்​து​ கொண்டு போட்​டிகளில் வெற்​றி​பெற்ற ஆசி​ரியர்​கள், மாணவர்​களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்​டினர்.

முன்​னதாக ‘வாய்ஸ் ஆஃப் விழிப்புணர்வு - 2026’ சிறப்பு புத்​தகத்​தையும் வெளி​யிட்​டனர். நிறைவு விழா​வில் பங்​கேற்ற துறைமுக அதி​காரி​கள் பேசிய​தாவது:

பி.அனுக்​கிரஹா: செழிப்​புக்​கான நேர்மை என்ற கொள்​கை​யில் உறுதி​யேற்று நமது துறைமுகத்தை நம்​பிக்கை, செயல்​திறன், வெளிப்​படைத்​தன்மை மற்​றும் தளராத நேர்​மையின் அடை​யாளமாக மாற்ற அனைத்து அதி​காரி​களும் பாடு​படுவோம்.

<div class="paragraphs"><p>காமராஜர் துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2026’ நிறைவையொட்டி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து நடத்திய போட்டிக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ‘கண்காணிப்பு குரல்’ புத்தகத்தை காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்களின் தலைவர் சச்சின்&nbsp; எஸ்.குர்வே வெளியிட்டார். தலைமை கண்காணிப்பு அதிகாரி பி.அனுக்ரஹா, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p></div>

காமராஜர் துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2026’ நிறைவையொட்டி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து நடத்திய போட்டிக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ‘கண்காணிப்பு குரல்’ புத்தகத்தை காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்களின் தலைவர் சச்சின்  எஸ்.குர்வே வெளியிட்டார். தலைமை கண்காணிப்பு அதிகாரி பி.அனுக்ரஹா, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஜே.பி.ஐரீன் சிந்​தியா: ஒரு சிறந்த நிறு​வனத்​துக்கு நம்​பிக்கை, வெளிப்​படைத்​தன்மை மற்​றும் நெறி​முறைகள் ஆகிய மூன்று அடிப்​படை கொள்​கைகள் அவ​சி​யம். நாம் அறநெறி​யின் முக்​கியத்​து​வத்தை உணர்ந்து செயல்​பட வேண்​டும். அப்​படித்​தான் பெரிய வணிகங்​களை கட்​டமைக்க முடியும்.

எஸ்.விஸ்வநாதன்: ஊழல் தடுப்பு உணர்வு என்​பது ஒவ்​வொரு​வரின் மனசாட்​சிக்கு உள்​ளிருந்தே தொடங்க வேண்​டும். எந்​தவொரு நிறு​வனத்​தின் அல்​லது நாட்​டின் நீடித்த வளர்ச்​சிக்​கும் நேர்மை, அறநெறி மற்​றும் நாணயம் ஆகிய மூன்​றுமே அடிப்​படை தூண்​களாகும். நேர்மை இல்​லாமல் நம்​பிக்கை சிதையும். நாணயம் இல்​லாமல் அமைப்​பு​கள் செயல் திறனை இழக்​கும்.

சச்​சின் எஸ்.குர்வே: மாணவர்​களாகிய நீங்​கள் முக்​கிய​மான கால​கட்​டத்​தில் இருக்​கிறீர்​கள். அறிவு, திறன், தொழில்​நுட்​பம் மட்​டுமே நம்மை முழு மனித​னாக மாற்​றி​விடாது. நல்ல குணநலன், நேர்மை, ஒழுக்​கம், நாணயம் ஆகியவை ஒரு​வரை வெற்​றியாளராக மாற்​றும்.

அதுவே உங்​கள் சாதனைகளின் உண்​மையான மதிப்பை தீர்​மானிக்​கும். எனவே நேர்மை உங்​கள் பழக்​க​மாகவும், ஒழுக்​கம் உங்​கள் வாழ்கை முறை​யாகவும், நாணயம் உங்​கள் அடை​யாளமாகவும் மாறட்​டும். இவ்​வாறு அவர்​கள் பேசினர்.

<div class="paragraphs"><p>போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுடன் அதிகாரிகள்.</p></div>

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுடன் அதிகாரிகள்.

வெற்றிபெற்றோர் விவரம்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவர்​களுக்​கான ஆன்​லைன் விநாடி-வினா போட்​டியும், ஆசி​ரியர்​களுக்​கான கட்​டுரை போட்​டியும் நடை​பெற்​றன. ஆன்​லைன் விநாடி-வினா போட்​டி​யின் நாலெட்ஜ் பார்ட்​ன​ராக எக்ஸ் க்​யூஸ் ஐடி இணைந்​திருந்​தது.

இப்​போட்​டிகளில் சென்னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களைச் சேர்ந்த அரசு மற்​றும் தனியார் பள்ளி மாணவ மாணவி​கள் மற்​றும் ஆசி​ரியர்​கள் பங்​கேற்​றனர்.

போட்​டிகளில் சீனியர் பிரி​வில் கே.கே.நகர் பிஎஸ்பிபி சீனியர் செகண்​டரி பள்ளி மாணவர் எஸ்.ரமேஷ் கிருஷ்ணா முதலிடத்​தையும் தி குரோவ் பள்ளி மாணவர் எஸ்.லோகேஷ்​வர் இரண்​டா​மிடத்​தையும் தி பிஎஸ்பிபி மில்​லி​னியம் பள்ளி மாணவர் கே.ஏ.துஷார் மூன்​றாமிடத்​தையும் பெற்​றனர்.

அதேபோல் ஜூனியர் பிரி​வில் கோபாலபுரம் டிஏவி பெண்​கள் மேல்​நிலைப் பள்ளி மாணவி ஆர்.சஞ்​சனா முதலிடத்​தையும், ராணுவ பள்ளி மாணவி அஜூனி கவுர் இரண்​டா​மிடத்​தையும், வேளச்​சேரி சென்னை மேல்​நிலை பள்ளி மாணவர் எம்.அருளமுதன் மூன்​றாமிடத்​தையும் பெற்​றனர்.

ஆசி​ரியர்​களுக்​கான கட்​டுரை போட்​டி​யில் காஞ்​சிபுரம் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப்​பள்ளி ஆசி​ரியை விஜயலட்​சுமி முதலிடத்​தையும், திரு​வள்​ளூர் எலைட் வேர்ல்ட் பள்ளி ஆசி​ரியை அனுபிரியா இரண்​டா​மிடத்​தையும், செங்​கல்​பட்டு அரசு மேல்​நிலைப்​பள்ளி ஆசி​ரியர் பாரதிராஜா மூன்​றாமிடத்​தையும் பெற்​றனர். நிறைவாக மேலா​ளர் (விழிப்புணர்வு) ராஜலிங்​கம் நன்றி கூறினார்.

காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுக ஆணையத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2026’ நிறைவு
எனக்கு சொந்தமாக கார் எதுவுமில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. விளக்கம்

X