

சென்னை: 2025 டிசம்பர் 11 மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘பாடுவோமே... பாரதியைக் கொண்டாடுவோமே...’ எனும் பள்ளிக் குழந்தைகளுக்கான பாடல் போட்டியை நடத்துகிறது. இப்போட்டிகளை லலிதா ஜூவல்லர்ஸ் மற்றும் வர்த்தமானன் பதிப்பகம் ஆகியன இணைந்து நடத்துகின்றன.
இப்போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு குழந்தைகள் பங்கேற்கலாம்.
பள்ளிக் குழந்தைகள் விரும்பும் பாரதியின் ஏதேனும் ஒரு பாடலை ஒரு நிமிடத்திற்குள் பாடி, அதை வீடியோவாக எடுத்து, அதனை 9384886990 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்கள் ‘இந்து தமிழ் திசை’ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்யப்படும்.
வரும் 2025 டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் வீடியோக்களை அனுப்பி வைக்க வேண்டும். தேர்வாகும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.