

சென்னை.
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணைய வழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் தொடர்ந்து 5 வாரங்கள் – 5 தலைப்புகள் – 15 பகுதிகள் கொண்ட நிகழ்வுகளாக ஒளிபரப்பாகவுள்ளன.
வாரம் -1 நோயுற்ற சமயங்களில் நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார செயல்பாடுகள்:
பிப்ரவரி 15, செவ்வாய். முதல் பகுதியில், கரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்றுகளின் தாக்கம், முகக் கவசம் அணிய வேண்டிதன் அவசியம், அனைவரும் சமூக இடைவெளி விட்டு இருப்பதனால் உண்டாகும் நன்மைகள்.
பிப்ரவரி 16, புதன். இரண்டாம் பகுதியில், வீட்டில் யாரேனும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டால், அவரை எவ்விதம் பாதுகாக்க வேண்டும், பயணங்களின்போது நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள்.
பிப்ரவரி 17 வியாழன். மூன்றாம் பகுதியில், பல்வேறு பருவ காலங்களுக்கேற்ப நம்மை எவ்விதம் தற்காத்துக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு பருவ காலத்திலும் பரவும் தொற்றுநோய்கள், இயற்கையாய் விளையும் உணவுப் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்கள், அவற்றை உட்கொள்வதனால் விளையும் நன்மைகள்.
பிப்ரவரி 18, வெள்ளி. நான்காம் பகுதியில், வயிற்றுப்போக்கு எதனால் உண்டாகிறது, வயிற்றுப்போக்கு வந்தவருக்கு எவ்வகை உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும், காய்ச்சல் ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும், தொற்று நோய்கள் பரவாத வண்ணம் நாம் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள்.
இந்த சுகாதார நிகழ்வில் டாக்டர் ராதாலெட்சுமி செந்தில் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ள வீடியோக்களிலிருந்து ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஒரு கேள்வி கேட்கப்படும். எந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அதிகளவில் சரியான பதிலைத் தந்து பங்கேற்கிறார்களோ அந்த பள்ளிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் பார்க்கலாம். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நிகழ்வு ஒளிபரப்பாகும் நாளன்று இந்த இணைய வழி நிகழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் கேள்வியும் தொடர்ந்து வெளியாகவுள்ளது. அந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் பூர்த்தி செய்து அனுப்புங்கள். மேலும், உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் கேள்விகளயும் சேர்த்தனுப்பி வையுங்கள்.