Published : 11 Feb 2021 07:19 PM
Last Updated : 11 Feb 2021 07:19 PM

அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும் JEE நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு

சென்னை.

அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து JEE நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பினை நடத்தவுள்ளன. இதற்கான முதல் நிலையில் தேர்வுபெறும் 7500 மாணவர்களுக்கு, FIITJEE பயிற்சி நிறுவனம் வழங்கும் JEE மெயின் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

தமிழக மாணவர்கள் மத்தியில் JEE மெயின் தேர்வில் வெற்றி பெற்று, மத்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டுமென்கிற எண்ணம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், JEE மெயின் தேர்வை எப்படி எதிர்கொள்வது, தேர்வறையில் எப்படி நேரத்தைச் சரியாக நிர்வகிப்பது, முந்தைய ஆண்டு கேள்வித்தாளின் அலசல், தேர்வு கால மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிகாட்டல் ஆகியவற்றை 54 மணி நேரத்திற்கான ஆன்லைன் பயிற்சியாக அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து வழங்கவுள்ளன.

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான FIITJEE பயிற்சி நிறுவனம் வழங்கும் JEE மெயின் தேர்வுக்கான இலவச பயிற்சியினை, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பெற விரும்பும் பள்ளி தலைமையாசிரியர் அல்லது முதல்வர் jeepractice@amrita.edu என்ற மின்னஞ்சலுக்கு கடிதம் எழுத வேண்டும். மாணவர்கள் https://bit.ly/3tDkeCG என்ற இணையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. வரும் 2021 பிப்ரவரி-25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் நிலை தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.. கூடுதல் விவரங்களுக்கு 180042590009 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். Tv Partner - News7 Tamil.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x