

ரோஜாக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றியிருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரோமானியர்கள் பண்டைய காலத்தில் கட்டிடங்கள், அறைகலன்கள் மற்றும் தங்களை அலங்கரித்துக்கொள்ள ரோஜா மலர்களை பயன்படுத்தியுள்ளனர்.
உலகின் மிகப் பழமையான ரோஜாச் செடி ஜெர்மனி நாட்டில் உள்ள ஹில்டெஷிம் கதீட்ரலில் உள்ளது. இது 1,000 ஆண்டுகள் பழமையானது.
அமெரிக்கா, இங்கிலாந்து, மாலத்தீவு, ஈரான், இராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தேசிய மலராக ரோஜா உள்ளது.
ரோஜாக்களில் வைட்டமின் சி உட்பட பல்வேறு சத்துகள் உள்ளன.
உலகில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன.
சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, ஆரஞ்சு என பல்வேறு வண்ணங்களில் ரோஜாக்கள் பூக்கின்றன.
சிவப்பு ரோஜா காதலையும், மஞ்சள் ரோஜா நட்பையும், ஊதா நிற ரோஜா பெண்மையையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ரோஜாப்பூ கலிபோர்னியாவில் பூத்துள்ளது. இதன் விட்டம் 33 அங்குலம்.
உலகின் மிகப்பெரிய ரோஜாச் செடியும் கலிபோர்னியாவில் உள்ளது. இச்செடி 18.8 அடி உயரம் கொண்டது.