

குழந்தைகள் மத்தியில் பிரபலமான பல பொழுதுபோக்கு அலைவரிசைகளில் சோனி ஒய்.ஏ.ஒய். (SONY YAY) தொலைக்காட்சியும் ஒன்று. அதில் ‘பரிசுக்கு இடைவேளை இல்லை’ (Gift Pe No Break) என்ற தலைப்பிலான போட்டியில் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காகத் தினமும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் பரிசுப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சிகளை நேற்று முதல் (ஜூன் 29) ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
இந்தத் தொலைக்காட்சியின், குழந்தைகளது மனங்கவர்ந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களான ஹனி-பன்னி (Honey-Bunny) ஆகிய இரண்டும், சோனி ஒய்.ஏ.ஒய். தொலைக்காட்சி அலைவரிசைத் தொடரில் வித்தியாசமான பரிசுப் பொருள்களுடன் தோன்றும். அப்போது, சோனி ஒய்.ஏ.ஒய்.யில் ஒளிபரப்பப்படும் தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்படும் எண்கள் பதிவு செய்யப்பட்டுக் குலுக்கல் அடிப்படையில் நாடு முழுவதும் பல எண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் திரையில் பார்த்த அந்தப் பரிசுப் பொருட்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கான மிகச் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கிவரும் சோனி ஒய்.ஏ.ஒய். தொலைக்காட்சி, இந்தப் போட்டியின் மூலம், தொலைக்காட்சியில் வரக்கூடிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் நேரடியாகக் குழந்தைகளுக்கு வழங்குவது போன்ற உணர்வுடன் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கிறது.
நிகழ்ச்சி பார்த்தாலே பரிசு என்ற கருத்தாக்கம், வீடடங்கி அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளது மன அழுத்தத்தைக் குறைக்கும். எனவே, அப்படியொரு நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்திலேயே இதை வடிவமைத்திருப்பதாக சோனி ஒய்.ஏ.ஒய். தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹனி-பன்னி கதாபாத்திரங்கள் இன்ஸ்டன்ட் கேமராக்கள், சைக்கிள்கள், ஹெட் போன்கள், வாட்ச் உள்ளிட்ட பல்வேறு தரமும் மதிப்பும்மிக்க பரிசுகளுடன் திரையில் தோன்ற இருக்கின்றன.
இந்த “கிஃப்ட் மராத்தான் நிகழ்ச்சி மூலம் குழந்தைகளுக்குப் பரிசு மழையைப் பொழியச் செய்வதுடன், அவர்களது இதயத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் எங்களைக் குறித்த நீங்கா நினைவுகளை விட்டுச் செல்ல விரும்புகிறோம்” என்று சோனி ஒய்.ஏ.ஒய். தொலைக்காட்சியானது ஊடகங்களுக்கு அனுப்பிய தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.