

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், புது வருடப் பிறப்பு, பெரியார் பிறந்தநாள்... எத்தனையோ தினங்களைத் திருநாளாய்க் கொண்டாடுகிறோம்! எந்த வகையினராய் இருந்தாலும் 'புத்தக நேசன்' என்னும் ஒற்றைக் குடையின்கீழ் வாசிப்பை நேசிப்பவர்கள் ஒன்றுகூடும் இடம் புத்தகக் காட்சி!
எத்தனை விதமான மனிதர்கள்... எத்தனை விதமான எதிர்பார்ப்புகள்... அத்தனைக்கும் விடைதேடி புத்தகக் காட்சியில் அலையும் மாந்தர் எத்தனை பேர்!
பிறந்த குழந்தைக் கையில் கொள்ளும் பாசத்தோடு, புத்தகக் காட்சியில் தான் பார்த்துப் பார்த்து வாங்கிய புத்தகங்களைச் சுமந்து செல்பவரா நீங்கள்?
அடுத்த சில மாதங்கள் உங்களது பொழுதைப் பொருளுள்ளதாக்க, இரவுகளை இனிமையானதாக்க, விரும்பி விரும்பி வாங்கிய புத்தகங்கள் என்னென்ன?
பகிர்ந்து கொள்ளுங்கள் இங்கே...