

கோயில் சிலைகளையும் பழமையான கலைப் பொருட்களையும் கடல் தாண்டி எப்படிக் கடத்துகிறார்கள் என்று பார்ப்பதற்கு முன்பாக, இன்னும் சில கடத்தல் சம்பவங்களைப் பார்த்துவிடலாம்.
கி.மு. 2-ம் நூற்றாண்டில் மேற்கு வங்கத்தில் சுங்கர்கள் ஆட்சியில் சந்திரகேது கர்க் என்ற நகரம் இருந்தது. புதையுண்ட இந்நகரத்தை 1968-ல் அகழ்வாராய்ச்சி செய்தது இந்தியத் தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறை. அதற்கு முன்னதாகவே இங்கிருந்து எடுக்கப்பட்ட ‘டெரகோட்டா’ என்று சொல்லப்படும் சுடு மண்ணால் ஆன பொம்மைகள், குழந்தைகள் - பெண்கள் சிலைகள், கல் பானை கள் உள்ளிட்டவைகளை கூரியர் சர்வீஸ் மூலம் நியூயார்க்கிற்கு கடத்தினார் கபூர். 1998-ல் இருந்து 2002 வரை பல்வேறு கட்டங்களாக இவைகள் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டதாகச் சொல்லப்படு கிறது. அப்படி கடத்தப்பட்ட கலை நயமிக்க பழமையான பானை ஒன்றை நியூயார்க்கின் உலகப் புகழ்பெற்ற மெட்ரோபாலிட்டன் மியூசியத்துக்கு தனது மகள் மம்தா சாகர் பெயரில் 2003-ல் அன்பளிப்பாகக் கொடுத்தார் கபூர்.
கடத்தப்பட்டு பிடிபட்ட சிலைகளில் உலகிலேயே அதிக விலைமதிப்பிலான சிலை ‘யக்ஷி’ தான். மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் பர்குத் என்ற பகுதியைச் சேர்ந்த ‘யக்ஷி’ சிலை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந் தது. இந்தக் கற்சிலையின் மதிப்பு சுமார் 95 கோடி ரூபாய். பர்குத் தில் ராம்பிரதாப் சிங் என்ற விவசாயி தனது வீட்டில் வைத்து வழிபட்டு வந்த இந்த ‘யக்ஷி’ சிலை 2004 ஜூலையில் திருடுபோனது. இது தொடர்பாக அப்போதே போலீஸில் புகார் செய்தார் ராம் பிரதாப் சிங். 19.07.2004-ல் எஃப்.ஐ.ஆர். பதிவு செய் திருக்கிறது போலீஸ். இந்தச் சூழலில் அடுத்த சில மாதங்களில் வெளி யான கபூரின் ஆர்ட் கேலரி ‘கேட்லாக்’கில் இந்த ‘யக்ஷி’ சிலையின் போட்டோவும் வருகிறது.
இதைக் கவனித்த ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ தன்னார்வலர்கள் அந்தச் சிலை குறித்த பின்னணித் தகவல்களைத் திரட்டினார்கள். மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இந்தியத் தொல்லியல் அதிகாரியான கிரீத் மான்கோலி அந்த ‘யக்ஷி’ சிலை குறித்த அரிய தகவல்களை 1978-ல் ஆவணப் பதிவு செய்திருக்கிறார். அதையும் கபூரின் ‘கேட்லாக்’ கையும் ஒருங்கிணைத்து அமெ ரிக்க ஹோம்லேண்ட் செக்யூ ரிட்டி போலீஸுக்குத் தகவல் அனுப்புகிறார்கள் தன்னார்வலர் கள். இதையடுத்து, திருட்டு வழக்குப் பதிவுசெய்து சிலையை 2011-ல் பறிமுதல் செய்துவிட்டது ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ். இந்தத் தகவல்கள் 2014 ஏப்ரலிலேயே டெல்லியில் உள்ள இந்தியத் தொல்லியல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டும் ‘யக்ஷி‘ இன்னும் இந்தியா வந்தபாடில்லை.
‘தடயம்’ காட்டிக் கொடுத்த தச்சூர் முருகன்
கள்ளக்குறிச்சி அருகே உள்ளது தச்சூர். இங்கே பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. இதன் அருகே, பல்லவர் காலத்து (எட்டாம் நூற்றாண்டு) சிற்பங் கள் மண்ணுக்குள் புதையுண்டு கிடந்தது 1990-ல் கண்டுபிடிக் கப்பட்டது. மண்ணுக்குள் இருந்த சிலைகளை வெளியில் எடுத்த தொல்லியல் ஆர்வலர்கள், அவற்றை கோயிலுக்கு அருகி லேயே பாதுகாப்பாக வைத்தனர். இந்தச் சிலைகள் பற்றிய விவரங்களை முனைவர் நாகஸ்வாமி 2002-ல் ‘தடயம்’ என்ற புத்தகத்தில் படங்களோடு பதிவும் செய்கிறார்.
ஆண்டுகள் சில கடந்தன. சிவன் கோயிலின் திருப்பணி வேலைகள் தொடங்குகின்றன. அப்போது, பல்லவர் கால சிலைகளை மீண்டும் பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோதுதான், அதில் இருந்த முருகன் சிலை ஒன்று அங்கிருந்து கடத்தப் பட்டது தெரியவருகிறது. உடனே களத்தில் இறங்கிய தன்னார்வலர் கள், ‘தடயம்’ இதழில் வெளியாகி இருந்த தச்சூர் முருகன் சிலையின் படத்தை தங்களது முகநூல் மூலமாக பரப்பி, தகவல் சேகரித்தனர். அப் போதுதான், சுபாஷ் கபூரின் ‘கேட்லாக்’கில் அந்த முருகன் சிலையின் படமும் இருப்பது தெரிய வந்தது. பாண்டியர் காலத்து சிவன் சிலை என பொய்யான தலைப்பில் முருகன் சிலையை தனது ‘கேட்லாக்’கில் வெளியிட்டிருக்கிறார் கபூர். இந்தச் சிலையும் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தச்சூர் முருகனுக் காக தமிழகத்தில் இதுவரை எஃப்.ஐ.ஆர். கூட போடப்பட வில்லை.
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்து பிரம்மா - பிரம்மி கற்சிலை ஒன்றும் லண் டனுக்குக் கடத்தப்பட்டது. அதை மீட்டு வரப்போன நமது இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் என்ன காரியம் செய்தார்கள் தெரியுமா?
- சிலைகள் பேசும்...
'The India Pride Project' உதவியுடன்
முந்தைய அத்தியாயம்: >35 ஆண்டுகளுக்கு முன் பதிவுசெய்யப்பட்ட சிலை ஆவணங்கள் எங்கே?!