

நாறும்பூ நாதன், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த என் அப்பா ராமகிருஷ்ணன், எனது பள்ளிப் பருவத்திலேயே நூலகம் எனும் புதிய உலகத்தை அறிமுகப்படுத்திவைத்தார்.
காமிக்ஸ் தொடங்கி கல்கி வரை இளம் வயதிலேயே புத்தகங்கள் மீதான காதல் உருவாகிவிட்டது.
இன்றும் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். புத்தகக்காட்சி எங்கு நடந்தாலும் அங்கு சென்றுவிடுவேன். வீட்டில் 10,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருக்கிறேன்.
இந்தப் புத்தகக்காட்சியில், உதயசங்கர் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ‘மீன் காய்க்கும் மரம்’ (நூல் வனம்), ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ (பாரதி புத்தகாலயம்), அ.முத்துலிங்கம் எழுதிய ‘குதிரைக்காரன்’ (காலச்சுவடு), டாக்டர் ராமானுஜன் எழுதிய ‘நோயர் விருப்பம்’ (பாரதி புத்தகாலயம்), முனைவர் சங்கர்ராமன் எழுதிய ‘எண்ணுவது உயர்வு’ பாரதியின் ‘புதிய ஆத்திசூடிக்கான விளக்கவுரை (விஜயா பதிப்பகம்) ஆகிய புத்தகங்களை வாங்கினேன்.