சுதந்திரப் போராட்டத்தில் கலைஞர்களின் பங்கு | சுதந்திர நாள் சிறப்பு பகிர்வு

சுதந்திரப் போராட்டத்தில் கலைஞர்களின் பங்கு | சுதந்திர நாள் சிறப்பு பகிர்வு
Updated on
1 min read

எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஓவியர்கள், திரைப்படத் துறையினர் இல்லாமல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு முழுமை அடையாது. 1800 களின் தொடக்கம் முதல், 1947இல் இந்தியா விடுதலை ஆனதுவரை சுதந்திரப் போராட்டப் பயணத்தில் கலைஞர்களின் பங்கு அளப்பறியது.

1850களில் சமூகச் சீர்த்திருத்த சிந்தனையாளர் ராஜா ராம்மோகன் ராய், இலக்கியத் துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் போன்றோர் இந்திய மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்கவும், ஆங்கிலேய ஆட்சியை விமர்சனம் செய்யவும் கலை இலக்கியத்தைக் கையில் எடுத்தனர்.

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று குறிப்பிடப்படும் 1857இல் மீரட்டில் தொடங்கிய சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து நாட்டுப்புறப் பாடல்கள், நாடகங்கள், கதைகள் வழியே ஆங்கிலேயர் ஆதிக்கம் பற்றி வெளியில் சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் வில்லுப்பாட்டு, தெருக்கூத்து கலைகள் வழியே விடுதலை உணர்வு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

1880களுக்குப் பிறகு அச்சு ஊடகம் பிரபலமடையத் தொடங்கிய காலம் அது. நாடு முழுவதில் இருந்தும் தலைவர்கள் அவரவர் சொந்த மொழிகளில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கட்டுரைகளை, கவிதைகளை, செய்திகளை எழுதிப் பிரசுரிக்கத் தொடங் கினர். மகாகவி பாரதியார் பணிபுரிந்த ‘சுதேசமித்ரன்’ பத்திரிகை தேசிய உணர்வை மக்களிடம் விதைத்தது. காலம் ஓடத் தளம் மாறினாலும் விடுதலை உணர்வு மட்டும் மாறவே இல்லை.

அச்சு ஊடகத்தைத் தொடர்ந்து 1900இன் ஆரம்பக் காலத்தில் தேசிய விடுதலையை வலியுறுத்தும் ஓவியங்கள், மேடை நாடகங்கள், பாடல்கள் அதிகம் பரவின. ‘வந்தே மாதரம்’ எனும் முழக்கம் நாடு முழுவதும் பரப்பப்பட்டு விடுதலைக் கான மந்திரம் ஆனது. 1930களில் திரைப்படங் களின் வழியே சுதந்திரத்துக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விடுதலை உணர்வைத் தூண்டிய கலைஞர்களைப் பார்த்து மிரண்டு போன ஆங்கிலேயர்கள், படைப்புகளைக் கண்காணிப்பது, எதிர் கருத்து களுக்குத் தடை விதிப்பது, பதிப்பகங்களை, நாடகக் குழுக்களை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். ஆங்கிலேயரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிரெஞ்சு காலனியான பாண்டிச்சேரிக்குச் சென்றார். அப்போதைய மதராஸ் மாகாணத்துக்குள் அவரை நுழைய விடாமல் ஆங்கிலேயர்கள் கெடுபிடி செய்தனர்.

கவிஞர் பாரதிதாசன், நடனக் கலைஞர் ருக்மிணி தேவி அருண்டேல், ‘பாரத மாதா’ ஓவியம் தீட்டிய ஓவியர் அபனிந்திரநாத் தாகூர், ‘சாரே ஜகான் சே அச்சா’ பாடலை எழுதிய கவிஞர் அல்லாமா இக்பால், இந்தியத் திரைப்பட இயக்குநர் தாதா சாகேப் பால்கே போன்று பலர் கலை வழியே இந்திய விடுதலைக்காகப் போராடினார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in