

ஜெயந்தன் விருதுக்கு 01.01.2024 – 31.12.2024 இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் குறித்த பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என ஒவ்வொரு பிரிவிற்கும் பரிந்துரைகள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. நூல்களை அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, பரிந்துரைகளை மட்டும் அனுப்பிவைத்தால் போதுமானது. பரிசுத் தொகை ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.10,000 பரிசும், பாராட்டுக் கேடயமும் வழங்கப்படும். பரிந்துரைகள் வந்து சேர கடைசித் தேதி: 31.3.2025. பரிந்துரைகளை kodulines@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது https://forms.gle/ns4sSBrpuDN3ns9a6 என்கிற கூகுள் படிவத்தில் பதிவேற்றலாம். மேலதிகத் தொடர்புக்கு: 8667411847.
தமுஎகச விருதுகளுக்கு நூல்கள் வரவேற்பு
கே.பி. பாலச்சந்தர் நினைவு நாவல் விருது, சு.சமுத்திரம் நினைவு விளிம்பு நிலை மக்கள் குறித்த படைப்பு விருது, வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் நினைவு கவிதை விருது, பா.இராமச்சந்திரன் நினைவு குறும்பட விருது, என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு ஆவணப்பட விருது உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகளுக்கு நூல்களை, படங்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. மேலதிகத் தொடர்புக்கு: 7373073573.
விஜயா வாசகர் வட்ட விருதுகள் அறிவிப்பு
கோயம்புத்தூர் விஜயா வாசகர் வட்டம் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கிவருகிறது. இந்தாண்டுக்கான ஜெயகாந்தன் விருது மு.குலசேகரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும் உள்ளடக்கியது. புதுமைப்பித்தன் சிறுகதை விருது, மீரா கவிதை விருது, வானதி புத்தக விற்பனையாளர் விருது, சக்தி வை.கோவிந்தன் சிறந்த நூலகர் விருது ஆகிய விருதுகள் முறையே குமார நந்தன், மதார், தென்காசி வீரசிவாஜி புத்தக உலகம் உரிமையாளர் A.சுகுமார், செங்கோட்டை அரசு நூலக மூன்றாம் நிலை நூலகர் கோ.ராமசாமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு விருதுகளும் ரூ.25,000 ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும் உள்ளடக்கியவை.