

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் பாக்கிய ஸ்தானம் மிகவும் வலிமையாக இருப்பதால் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். சூரியன் சஞ்சாரம் பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். லாப ஸ்தானத்தில் சனி, ராகு இணைவால் தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
அஸ்வினி: இந்த வாரம் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.
பரணி: இந்த வாரம் அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் பணப் புழக்கம் அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கிரக கூட்டணியால் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலை பற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பண தேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு ஏற்படும்.
குடும்ப உறுப்பினர் உடல் நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும், சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகளுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர். தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.
ரோகிணி: இந்த வாரம் கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்கு உண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக் கவலை இருக்கும். சக மாணவர்களுடன் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று வீர பத்திர ஸ்வாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் சப்தம ஸ்தானத்தில் இருக்கும் நான்கு கிரக கூட்டணியால் நீங்கள் எடுக்கும் முடிக்கும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமை கண்டு மன மகிழ்ச்சி கொள்வீர்கள். செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும்.
பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். கலைக்காரகன் சுக்கிரனின் இருப்பால் கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் வெளிப்படும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
திருவாதிரை: இந்த வாரம் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒரு வகையில் வாக்கு வாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபம் உண்டாகும்.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் சஞ்சாரத்தால் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும்.
பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள். ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் கிரக இணைவால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பண வரத்தில் தாமதம் இருக்கும்.
பூசம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இறுதியில் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் பின் தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.
ஆயில்யம்: இந்த வாரம் பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அனைவரிடமும் அனுசரித்து செல்வீர்கள். பண வரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரிய தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் திரிகோண ஸ்தானங்கள் மிகவும் பலமாக இருப்பதால் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்கு வரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பண வரத்தும் இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். பெண்களுக்கு தடை பட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
மன தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகம்: இந்த வாரம் சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும்.
பூரம்: இந்த வாரம் பண வரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். கோதுமையில் விளக்கு ஏற்றுவது சிறந்தது.
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் தன வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பண வரத்து அதிகரிக்கும்.விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மன துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.
பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். கலைஞர்களுக்கு புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மை தரும். மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.
அஸ்தம்: இந்த வாரம் எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும்.
துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் தைரிய வீரிய ஸ்தானம் மிகவும் பலமாக இருக்கிறது. பாக்கிய ஸ்தானத்தை குரு அலங்கரிக்கிறார். எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.
பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம்.
மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் உண்டாகும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.
சுவாதி: இந்த வாரம் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் பண வரத்து மன மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல் நலத்தில் கவனம் தேவை. மனக் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தை நான்கு கிரகங்கள் பார்க்கிறார்கள். உங்களுக்கு வரும் முன் கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பண வரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத் தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும்.
கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சில நற்பலன்கள் வந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். கலைத்துறையினருக்கு கவனம் தேவை. மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை, தாமதம் ஏற்படலாம். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனை தீரும்.
அனுஷம்: இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செயல்படுவது நல்லது. பண வரவு ஏற்படும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.
கேட்டை: இந்த வாரம் எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் திரிகோணம் பலமாக இருப்பதால் எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மன மகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய் வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள்.
வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.
பெண்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு உங்கள் கவுரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
மூலம்: இந்த வாரம் விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
பூராடம்: இந்த வாரம் வாக்கு வன்மை நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன கசப்பு மாறும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் ராசிக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இருப்பதால் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். பெண்களுக்கு முயற்சிகள் தாமதப்படும்.
கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை எடை போடுவது நல்லது. முன் கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பண வரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.
திருவோணம்: இந்த வாரம் எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சனி, ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் தலை தூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பண தேவையை சரி கட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பெண்களுக்கு பண வரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பண வரத்து திருப்தி தரும்.
சதயம்: இந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். எதிலும் வெற்றி உண்டாகும். மன குழப்பம் தீரும். எதிலும் சிறு பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரண கோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் கேந்திரங்கள் பலமாக இருக்கிறது. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். திடீர் கோபம் நீங்கும். அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டம் இது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் செலவும் வரும். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம்.பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.
ரேவதி: இந்த வாரம் மன கஷ்டம் தீரும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.
பரிகாரம்: விநாயகரை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல