மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 28 - ஜூன் 3

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 28 - ஜூன் 3
Updated on
11 min read
மேஷம்:

பலன்கள்: இந்த வாரம் முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல்துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அஸ்வினி: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பண வரத்தும் இருக்கும். தொழிலாளர்களால் மிகுந்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும்.

பரணி: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும். வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் மந்த நிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்கள் சொற்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கால தாமதமான நிலை காணப்படும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

ரிஷபம்:

பலன்கள்: இந்த வாரம் பண வசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும்.

கலைத் துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்தி தான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். கலைத் துறையினருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

ரோகிணி: இந்த வாரம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக மனிதர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும்.

பரிகாரம்: மகா லட்சுமியை வழிபட பண கஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:

பலன்கள்: இந்த வாரம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம்.

அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற, கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சம் இருக்காது. மன வருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.

திருவாதிரை: இந்த வாரம் வர வேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் நல்ல பெயர் கிட்டும். மேலிடத்தில் இருந்து அதிகமான சுமைகளைத் தருவார்கள். மனோ தைரியம் உண்டாகும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதை கண்டு மனம் மகிழ்வீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும். பண வரத்து அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

பரிகாரம்: ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நண்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும்.

கடகம்:

பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். அரசியல்துறையினருக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். பிள்ளைகள் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான பேசி பொழுதை கழிப்பீர்கள்.

பூசம்: இந்த வாரம் கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

ஆயில்யம்: இந்த வாரம் மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமான மனநிலை காணப்படும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும். குடும்ப கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: ஆதி பரா சக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக் கவலை அகலும்.

சிம்மம்:

பலன்கள்: இந்த வாரம் பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் தன ரீதியில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பண வரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பூரம்: இந்த வாரம் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் நிறுவன பங்குகள் உயரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கவுரவம் அளிப்பார்கள். மேலிடத்தில் இருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். பெண்களுக்கு பண வரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் மன்னேற்றம் காணப்படும். முழு கவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும்.

பரிகாரம்: சிவனை வணங்க எதிர்ப்புகள் விலகும். மன குழப்பம் நீங்கும். கடன் பிரச்சனை குறையும்.

கன்னி:

பலன்கள்: இந்த வாரம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும்.

திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும்.

வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்கு தொலை தூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். கலைத் துறையினருக்கு மனதில் சந்தோஷம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாக போவது நல்லது. நிலம் வீடு சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பண வரத்து திருப்தி தரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

அஸ்தம்: இந்த வாரம் கலைத்துறையினருக்கு வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும். உங்கள் செயல் திறமை வெளிபடும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மன திருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழு கவனம் செலுத்துவீர்கள்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் அரசியல் துறையினருக்கு உங்களது வார்த்தையின் மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைபடி உடனிருப்பவர்கள் கேட்டு செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.

பரிகாரம்: ஆதி கேசவ பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும்.

துலாம்:

பலன்கள்: இந்த வாரம் மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு சிறப்பான கால கட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசியல் துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும்.

சுவாதி: இந்த வாரம் எந்த ஒரு வேலையையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பண வரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். கட்டுப்பாடற்ற சுதந்திர எண்ணம் உண்டாகும். சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும். மனக் கவலை தீரும்.

விருச்சிகம்:

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த பண வரத்து தாமதப்படலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும்.

மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம்.

பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. கலைத் துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல் துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மன குழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.

அனுஷம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பண வரத்தும் திருப்தி தரும். பண வரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனமாக செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

கேட்டை: இந்த வாரம் கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள்.

பரிகாரம்: முருக கடவுளை வணங்க எல்லா வற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

தனுசு:

பலன்கள்: இந்த வாரம் பண வரத்து திருப்திகரமாக இருக்கும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும்.

அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும்.

பெண்களுக்கு விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப் படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

மூலம்: இந்த வாரம் மாணவர்கள் சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பயணங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

பூராடம்: இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பண தட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். வீண் பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.

பரிகாரம்: குரு பகவானை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

பலன்கள்: இந்த வாரம் இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது.

வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு பண வரத்து திருப்தி தரும்.

வெளியூர் பயணம் செல்ல நேரலாம். கலைத் துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசியல் துறையினருக்கு மனம் வருந்தும் படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்து போவது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சக மாணவர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும்.

திருவோணம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்வது நன்மை தரும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் உணர்ச்சி வசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு விளக்கு ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும்.

கும்பம்:

பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பண வரத்து கூடும். காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்ல படியாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்கு வன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கலைத் துறையினருக்கு சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்கள் மூலம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.

சதயம்: இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். எதிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே திடீர் மன வருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். காரிய தாமதம் உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது சிரமம். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மன வருத்தம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்:

பலன்கள்: இந்த வாரம் பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம் போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பண தேவை ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அது பற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.

கலைத் துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சுப காரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பண வரத்து திருப்தி தரும்.

ரேவதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும். பண வரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர மன கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

<div class="paragraphs"><p><em>இந்த வார கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 28 - ஜூன் 3
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in