துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ அக்.22 - 28

துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ அக்.22 - 28
Updated on: 
3 min read
துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- ராசியில் புதன்(வ), சுக்கிரன்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசி பலமாக இருப்பதால் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களில் வேகம் பிறக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம்.

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும்.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் இணக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சுவாதி: இந்த வாரம் எந்த ஒரு விவகாரத்தையும் எதிர்கொள்ளும் மனவலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சந்திரன் சஞ்சாரம் உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன்(வ), சுக்கிரன்(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பாக்கிய ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சாரம் இருப்பதால் எந்த காரியத்தை செய்தாலும் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சனைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் நீடித்து வந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வார்த்தைகளை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.

கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

அனுஷம்: இந்த வாரம் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

கேட்டை: இந்த வாரம் வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

பரிகாரம்: அம்மனை வணங்கி வர பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மன அமைதி கிடைக்கும்.

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் புதன்(வ), சுக்கிரன்(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசியை குரு பார்ப்பதால் எல்லா காரியங்களிலும் அதிக முயற்சி மூலம் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும்.

பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

மூலம்: இந்த வாரம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

பூராடம்: இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்: நவக்கிரத்தில் குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்சனை தீரும். குடும்பத்தில் நன்மை ஏற்படும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ அக்.22 - 28
The President’s Cake: லாமியாக்களின் கண் சிமிட்டல்களில்... | திரை தேவதைகள் 40

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in