

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் தைரிய வீரிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் மிக வலுவாக இருப்பதால் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். அரசியல்துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் நிறைய செலவு செய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டி வரும். வருமானம் போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்குக் கிடைக்கமாட்டார்கள்.
சுவாதி: இந்த வாரம் பண வரவுகள் தேவைக்க ஏற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வர வேண்டிய பணப் பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். இடைவிடாத உழைப்பால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது. மாணவ-மாணவியர் விளையாட்டுப்போட்டிகளில் பல பரிசுகளைத் தட்டிச்செல்வீர்கள்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் கல்வி பயில்பவர்கள் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்திப் படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற முடியும். கல்விக்காக நீங்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கப் பெறும். நல்ல நண்பர்களின் உதவிகள் தக்க சமயத்தில் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். பண வரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.
பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகா லட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் அனுகூலமான பலன்கள் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த மனக் கசப்பு மாறும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும்.
பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல் துறையினருக்கு மனோதிடம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். எந்தவொரு புதிய முயற்சியிலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
அனுஷம்: இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப் பெண்களைப் பெற முடியும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். புத்திரர்களால் மன சஞ்சலங்களும், தேவையற்ற வீண் செலவுகளும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
கேட்டை: இந்த வாரம் முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் கடுமையான நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களிடையே வீண் விரோதங்கள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொழில், வியாபார நிலையில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையும். கூட்டாளிகளும் சாதகமின்றி செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படுவதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு அபிவிருத்தி குறையும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் ராசி பலம் பெற்றிருப்பதால் தடைகளை தகர்ப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச் செலவுகள் இருக்கும். பண வரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். பேச்சு திறமை கை கொடுக்கும். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கு இடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள்.
கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
மூலம்: இந்த வாரம் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நலக்குறைவுகளால் அடிக்கடி விடுப்பெடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். உடல்நிலையில் தேவையற்ற பிரச்சினைகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் எதிலும் முழுப் பலனை அடைய முடியாது.
பூராடம்: இந்த வாரம் தொழில், வியாபார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் அனுகூலமான பலனை அடைவீர்கள். முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் சரிவரச் செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் ஆதரவுகளை இழப்பார்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களே நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ பைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல