கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ ஜன.8 - 14

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ ஜன.8 - 14
Updated on
4 min read

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பெண்களுக்கு பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் அமையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். சிலருக்கு வாய்ப்புகள் வந்து குவிவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

பூசம்: இந்த வாரம் எதிர்பாராத வீண் விரயங்கள், தேவையற்ற செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் மட்டும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண் பிரச்சினைகளாலும் மனக் குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

ஆயில்யம்: இந்த வாரம் உற்றார்- உறவினர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து செல்ல நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். திருமண சுப காரிய முயற்சிகளுக்கான பேச்சு வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ஐந்தாமிடம் மிக வலுவாக இருப்பதால் எடுக்கும் முயற்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண் செலவு குறையும். நல்லதா ? கெட்டதா ? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும்.

வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும்.

பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும்.

மகம்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்களும் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சோதனை நிறைந்த காலமாக இருக்கும். மக்களின் தேவையறிந்து செயல்படுவது உத்தமம்.

பூரம்: இந்த வாரம் கல்வியில் மந்த நிலை ஏற்படும் என்பதால் அதிக கவனம் செலுத்துவது, தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது நல்லது. மனைவி, புத்திரர்களின் உடல்நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற மன சஞ்சலங்களும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வதினால் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நற்பலன் உண்டாகும். திருமண காரியங்கள் தடைப்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புதிய பொருட்சேர்க்கைகளும் ஆடை, ஆபரணமும் சேரும்.

பரிகாரம்: அருணாச்சலேஸ்வரரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு- தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் கேந்திரங்கள் மிக பலமாக இருப்பதால் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும்.

தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள்.

பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கமிஷன் ஏஜென்சி போன்றவற்றில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். பண விஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்து விடுவது உத்தமம். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாக கால தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற இயலாது. தொழிலார்களால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

அஸ்தம்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும், கவுரவமான பதவிகளைப் பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் உங்களின் வேலைப்பளுவைக் குறைக்கும். பணியில் நிம்மதியான நிலைகள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் பெண்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை, மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பண வரவுகளில் தடைகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்க முடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுப காரிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ ஜன.8 - 14
துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ ஜன.8 - 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in