

பலன்கள்: இந்த வாரம் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.
சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம் விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள்.
பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும்.
சுவாதி: இந்த வாரம் எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். கட்டுப்பாடற்ற சுதந்திர எண்ணம் உண்டாகும். சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிர பகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் மனோ தைரியம் அதிகரிக்கும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.
பங்குதாரர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணியிட மாற்றம்- பதவி உயர்வு தங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும்.
அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். அரசியல் துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.
அனுஷம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனமாக செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.
கேட்டை: இந்த வாரம் கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள்.
பரிகாரம்: செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
பலன்கள்: இந்த வாரம் திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். தொழில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது.
விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அரசியல்துறையினருக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள்.
மூலம்: இந்த வாரம் மாணவர்கள் சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.
பூராடம்: இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பண தட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். வீண் பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.
பரிகாரம்: சிவபெருமானை தினமும் 11 முறை வலம் வந்து வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.