

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அதே வேளையில் ராசியை சனி பார்ப்பதால் அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும்.
தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக் கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும்.
அஸ்வினி: இந்த வாரம் வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சமாளித்து எதிர்நீச்சல் போட்டே முன்னேற்றத்தை அடைய முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனை உண்டாக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க தேவையான உத்வேகம் கிட்டும். தைரியமாக இருக்க இறைவனை வேண்டுங்கள்.
பரணி: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் பலவழிகளில் வந்து உங்களின் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள் சேரும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலமாக அமையும். புத்திர பாக்கியம் உண்டாகி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உற்றார்- உறவினர்களும் சாதகமாக அமைவார்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கக்கூடிய காலமாக இருக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் போன்ற யாவும் வாங்கக்கூடிய யோகம் அமையும். சேமிப்பு பெருகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களும் சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.
பரிகாரம்: முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருந்தாலும் சுய சாரம் பெற்றிருப்பதால் ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் ஸ்தானம் யோகமாக இருப்பதால் தொழில் வியாபாரம் தொடர்பான சுபச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். கலைத் துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களுடைய புகழ், பெருமை யாவும் உயரும். உடல் நலம் அற்புதமாக அமையும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சியுடனேயே இருப்பார்கள். எந்த வித மருத்துவச் செலவுகளும் இல்லாது இருக்கும். கவலை வேண்டியதில்லை. பொருளாதார நிலையும் சிறப்பாக அமைவதால் எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகி கடன்கள் அனைத்தும் பைசலாகும். சிலருக்கு புது வீடு கட்டி குடிபுகக்கூடிய எண்ணம் மேலோங்கும் . சிலருக்குப் பெரிய தொகை சேமிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
ரோகிணி: இந்த வாரம் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றியினைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் நல்ல லாபத்தை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் கிடைக்கப்பெறும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கடன்கள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். எல்லா வகையிலும் ஓரளவுக்கு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். பண வரவுகளில் இருந்து வந்த தடைகள் விலகி மேன்மையான பலன்கள் ஏற்படும். கடன்கள் சற்றுக் குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள்.
பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் தைரிய வீரிய ஸ்தானாதிபதி சூரியன் ராசியைப் பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தாமதமாகி வந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.மாணவர்கள் கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.
திருவாதிரை: இந்த வாரம் தேவையற்ற பொழுது போக்குகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பதன் மூலம் நற்பலனைப் பெற முடியும். ஓரளவுக்கு சேமிப்பு பெருகும். குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் பலவழிகளில் வந்து குவியும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் மன மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரிய தடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல