மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ ஜன.8 - 14

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ ஜன.8 - 14
Updated on
4 min read

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் அயன சயன போக ஸ்தானம் வலுவாக இருப்பதால் சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சகஜ நிலை நீடிக்கும். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும்.

கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல் துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் காப்பாற்றி அனைவரின் ஆதரவுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்த்த லாபத்தைப் பெற நிறைய போட்டிகளை சமாளிக்க நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்ற வற்றால் வீண் செலவுகள் உண்டாகும்.

திருவோணம்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கவுரவமான பதவி உயர்வுகளைப் பெற தாமத நிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சில இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத மேன்மைகள் உண்டாகும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நிறைவேறும். கணவன்- மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சனி, ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாக இருக்கிறது. எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத் துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும். பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள்.

கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தடைப்படும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் சுமாரான முறையில் நடைபெறும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மனைவி, பிள்ளைகள் வழியிலும் நிம்மதியற்ற நிலையே நீடிக்கும். பொருளாதார நிலையிலும் தடைகள் ஏற்படும் என்பதால் எல்லா வகையிலும் முடக்கங்கள் உண்டாகும்.

சதயம்: இந்த வாரம் கணவன்-மனைவி இடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் எவ்வளவு தான் பாடுபட்டாலும் அதற்கேற்ற முழுப்பலனை அடைய முடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிம்மதியற்ற நிலைகளை சந்திப்பார்கள். வீணான போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கும் தேவையற்ற பயணங்களும், அதன்மூலம் அலைச்சல்களும் உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் பணிகளை ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாமல் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அரசியல்வாதிகள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப் பட்ட சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு சிறப்பான குழந்தைப் பாக்கியமும் கிட்டும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயரை வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் கேந்திரங்கள் பலம் பெறுவதால் சிறப்பான பலன்களைப் பெற முடியும். ஜெனன கால சந்திரனுக்கு மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக இருக்கிறார்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பண வரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்துறையினர் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் வீடு, மனை வாங்கும் யோகம் யாவும் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சிலர் வெளியூர் சென்று வர நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், செரிமானக் கோளாறு, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவைப் பெற சில நேரங்களில் அவர்களை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் பண வரவுகள் சரளமாக இருப்பதால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் அமையும். பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அனுகூலத்தையும் அடைய முடியும். கூட்டாளிகளையும் தொழிலாளர் களையும் சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் சில ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

ரேவதி: இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். சில நேரங்களில் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயர்வடையும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.

பரிகாரம்: கிராம தெய்வத்தை பூஜித்து வணங்கி வர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ ஜன.8 - 14
443 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in