மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ மார்ச் 19 - 25

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ மார்ச் 19 - 25
Updated on
3 min read
மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் நீங்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது துரிதமாகும்.

மனதில் வியாபாரம் பற்றிய கவலை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் மறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள்.

பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. கலைத் துறையினருக்கு வீண் அலைச்சல் அகலும். சுபச்செலவு கூடும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.

அஸ்வினி: இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்குக் கவுரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப் பளு சற்றே அதிகரித்துக் காணப்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெற முடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும்.

பரணி: இந்த வாரம் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகளும், முயற்சிகளில் தடைகளும் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாது.

பரிகாரம்: முருக பெருமானை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல் துறையினருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பணவரவுகளிலும் தடை ஏற்படுவதால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழநிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும்.

ரோகிணி: இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாலும் ஞாபக மறதி, மந்த நிலை ஏற்படும். இதனால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சோதனையான காலமாகும். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாது இருப்பார்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் கொடுக்கும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

பரிகாரம்: குரு பகவானை வணங்க செல்வம் சேரும்.

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். மனதில் இருந்த கவலை அகலும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபச் செலவு ஏற்படும். கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நெருங்கியவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள் என்றாலும் உங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை முழுவதும் நம்பிவிடாமல் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் அமையும்.

திருவாதிரை: இந்த வாரம் திருமண சுப காரியங்கள் கூட கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவையும் குறைத்துக்கொள்ள முடியும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். அரசியல்வாதிகளுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்: விநாயகருக்கு விளக்கேற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ மார்ச் 19 - 25
போர்ச் சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in