மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ ஜூன் 11 - 17

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ ஜூன் 11 - 17
Updated on
4 min read
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். சந்திரன் சஞ்சாரத்தால் ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல் நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது.

கடன் விவகாரங்கள் கால தாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவனமாக பணி செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களையும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை வார இறுதியில் நடந்து முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் தரும சிந்தனை உண்டாகும். பண நெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

திருவோணம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத் தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரிய தடைகள் நீங்கும்.

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எந்த விஷயத்திலும் உடனடி தீர்வு காண முடியாத இழுபறி நிலை காணப்படும். சந்திரன் சஞ்சாரத்தால் புதிய நட்புகள் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மன வருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பண வரத்தும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும். அரசியல் துறையினருக்கு பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

சதயம்: இந்த வாரம் செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மன மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பண வரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பண வரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். சந்திரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை உண்டாக்கும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ராசியில் சஞ்சரிக்கும் சனி பல வகையிலும் வருமானத்தை பெற்று தருவார். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். ஆனால் கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மன வருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும்.

குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கலைத்துறையினருக்கு பண வரத்து திருப்தி தரும். அரசியல் துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன கவலைகள் நீங்கி தெளிவான நிலை ஏற்படும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத் தாங்கல்கள் வரலாம்.

ரேவதி: இந்த வாரம் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

<div class="paragraphs"><p><em>இந்த வார கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ ஜூன் 11 - 17
Spider-Noir: கருப்பு வெள்ளையில் ஒரு ‘க்ளாசிக்’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in