

பலன்கள்: இந்த வாரம் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை நீங்கள் முன்னின்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தின் நிதி நிலைமை சரியாக இருப்பதால் தேவையான அனைத்து வசதிகளும் தானாகவே வந்து சேரும்.
வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவீர்களேயானால் அதில் வெற்றி நிச்சயம். தொழில் பங்குதாரர்களிடமிருந்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகலாம். மேலதிகாரிகளின் கிடுக்குப்பிடியில் சிக்கி தவிப்பீர்கள்.
பெண்மணிகள் குடும்ப நிர்வாகத்தை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தாலும் அதை திறம்படச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு தைரியம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவ மணிகளுக்கு சந்தோஷமான வாரம். நண்பர்களுடன் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.
புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். வீண் பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
பூசம்: இந்த வாரம் சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.
ஆயில்யம்: இந்த வாரம் கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து வர வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
பலன்கள்: இந்த வாரம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்தில் தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளைய உறவு ஒன்று இல்லம் தேடி வரும். வீடு, நிலம் போன்றவைகளில் பணத்தை முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம். மொத்தத்தில் பிரச்சினையில்லா வாரம்.
தொழிலில் இருந்த இடையூறுகளைக் களைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அதில் உங்கள் மேல் பொறாமையும், விரோதமும் ஏற்பட வாய்ப்புண்டு. பழைய கடன்கள் வசூலாகும். அதனால் உங்களுக்கு மனநிம்மதி உண்டாகும்.
பெண்மணிகளுக்கு வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நன்மையைத் தரும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவமணிகள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மகம்: இந்த வாரம் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. மிகவும் கவனமாக பொருளாதார பிரச்சனைகளை கையாழுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் நிதானமாக பழகுவது நல்லது.
பூரம்: இந்த வாரம் வீண் அலைச்சல், காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.
பரிகாரம்: சிவபெருமான் முன் அமர்ந்து வணங்க மனம் ஒருநிலைப்படும்.
பலன்கள்: இந்த வாரம் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். குடும்பத்தில் தெய்வீக காரியங்கள் அதிகரிக்கும். அதற்கான செலவுகளும் இருக்கும். பிள்ளைகள் உங்களுடன் சேர்ந்து சில நற்காரியங்களைச் செய்வார்கள்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெண்கள் உணர்வுப்பூர்வமான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது.
கலைத்துறையினருக்கு சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். அரசியல்துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது. பொழுது போக்கு, வேடிக்கை நிகழ்ச்சிகளில் கவனத்தை சிதற விடாமல் இருப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
அஸ்தம்: இந்த வாரம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் உள்ள மந்த நிலை மாற கூடுதல் சிரத்தையுடன் காரியங்களை கவனிப்பது அவசியம். வாழ்க்கை தரம் உயரும்.
பரிகாரம்: துளசி மாடத்திற்கு விளக்கேற்றி வர செல்வம் சேரும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.