கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.18 - 24

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.18 - 24
Updated on
3 min read

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பண வரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுப நிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். அரசியல்வாதிகளைப் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மன திருப்தியை தரும்.

பூசம்: இந்த வாரம் உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில் நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

ஆயில்யம்: இந்த வாரம் சுப காரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் பண வரத்து நன்றாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். கேதுவின் சஞ்சாரம் ஆன்மீகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். அரசியல் வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத்துறையினருக்கு புகழும், கௌரவமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும்.

மகம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூரம்: இந்த வாரம் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடி புகுவார்கள். கணவன் மனைவிக்கு இடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும். பண வரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும்.

லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பண வரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும்.

உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மன நிம்மதி ஏற்படும். தொலை தூரப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

அஸ்தம்: இந்த வாரம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பண வரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.18 - 24
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.18 - 24

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in