

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். சூரியன் சஞ்சாரத்தால் மனதடுமாற்றம் அகலும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலை தூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம்.
குடும்பத்தில் சுப காரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்களுக்கு மன தடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அரசியல் துறையினருக்கு தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும்.
அஸ்வினி: இந்த வாரம் கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பண வசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பண வரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து காணப்படுவார்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மன கவலை நீங்கும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் பொன் பொருள் சேர்க்கை சேரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள்.
போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.
உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மன கசப்பு மாறும். பெண்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும். மன குழப்பம் நீங்கும்.
ரோகிணி: இந்த வாரம் காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: நவக்கிரகத்தை வணங்க எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும் மன கவலை நீங்கும்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. நெருக்கடி நிலை அகலௌம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பண வரத்து திருப்தி தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும்.
திருவாதிரை: இந்த வாரம் தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.
பரிகாரம்: பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.