கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ மார்ச் 19 - 25

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ மார்ச் 19 - 25
Updated on
3 min read
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். நல்ல பலன்களையே தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும் சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். உடல் நலக் கோளாறு அகலும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்ல படியாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்கு வன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.

பெண்களுக்கு பண வரத்து திருப்தி தரும். கலைத் துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். சக தோழர்களுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றால் நல்ல மேன்மை உண்டாகும்.

பூசம்: இந்த வாரம் கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகையைக் கூட எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவுகளால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

ஆயில்யம்: இந்த வாரம் பொன், பொருள் சேரும். மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் கூட அனுகூலப் பலனை அடைய முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட மனோ தைரியம் கூடும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தேவையற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். மன வருத்தம் நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பண தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம் போல் வியாபாரம் இருந்தாலும் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். கலைத் துறையினருக்கு காரிய வெற்றி பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். மாணவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

மகம்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனை படைப்பார்கள். அரசியல் வாதிகளின் பெயர், புகழ் உயரும். தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

பூரம்: இந்த வாரம் நீங்கள் எடுக்கும் காரியங்களில் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். பண வரவுகளில் இருந்த தடைகள் சற்றே விலகி கடன்கள் படிப்படியாகக் குறையும். திருமண சுப காரிய முயற்சிகளில் கூட அனுகூலமான பலனை அடைய முடியும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஓரளவுக்கு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கொடுக்கல்- வாங்கல்களிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் சிறப்பான லாபங்கள் உண்டாகும்.

பரிகாரம்: சிவனை வணங்கி வர மனக்கவலை நீங்கும்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பண வரத்தை அதிகப்படுத்தும். தொழிலதிபர்கள் அதிக பொருளாதார வரவுகளை பெறுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இதுவரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும்.

தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்து போவது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவையும் ஏற்றத்தை ஏற்படுத்தும்.

அஸ்தம்: இந்த வாரம் சிந்தித்து சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிலும் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் இருந்த கெடுபிடிகள் குறைந்து நிம்மதியான நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்ததில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்குவது நன்மை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ மார்ச் 19 - 25
போர்ச் சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in