Published : 22 Mar 2021 11:21 am

Updated : 22 Mar 2021 11:23 am

 

Published : 22 Mar 2021 11:21 AM
Last Updated : 22 Mar 2021 11:23 AM

வார நட்சத்திர பலன்கள் - அஸ்தம், சித்திரை, சுவாதி (மார்ச் 22 முதல் 28ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -


அதிக அளவில் நன்மைகள் ஏற்படும் வாரம் இது.

கடந்த சில வாரங்களாக இருந்த நெருக்கடிகளும் இப்போது முடிவுக்கு வரும்.

செலவுக்கேற்ற வருமானம் சரளமாக இருந்து கொண்டே இருக்கும். எனவே பணப் பிரச்சினை ஏதும் இருக்காது. சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அசையாச் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும்.

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நிறுவனங்களோடு தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்கள் பற்றிய பேச்சுக்கள் மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

செவ்வாய் -
முடிவுகளை உடனுக்குடன் எடுக்க வேண்டாம். நிதானமாக ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாகவும் வியாபாரம் தொடர்பாகவும் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். சகோதரர்களிடம் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளில் இப்போது சமாதானம் ஏற்படும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளைப் பேசி முடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

வியாழன் -
உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபார விஷயங்கள் சுமுகமாக நடைபெறும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நெருங்கிய நண்பர்கள் தொழில் தொடர்பான உதவிகளைச் செய்து தருவார்கள்.

வெள்ளி -
குடும்ப நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்காலத் தேவைகளுக்காக சேமிக்கும் எண்ணம் தோன்றும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி -
பணவரவு இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தொழிலில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நீங்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ஞாயிறு -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்..
*********************
சித்திரை -

பரபரப்பாக செயல்பட்டு காரியங்களைச் சாதிக்க வேண்டிய வாரம்.

கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வாழ்க்கைத்துணையின் வழியே தேவையான உதவிகள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். அவர் கூறிய கல்வி வளர்ச்சி மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். தொழிலில் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் வியாபாரத்தோடு மற்றொரு வியாபாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது பல வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு மனநிறைவைத் தரும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டிய நிலை இனி இருக்காது.

மாணவர்களின் கல்வியில் சீரான வளர்ச்சி இருக்கும். கலைஞர்களுக்கு நீண்ட நாளாக பேசிய ஒப்பந்தம் தொடர்பான விஷயங்கள் இப்போது சுமுகமாக முடித்து ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பயணங்கள் ஏற்படும். வியாபாரம் சீராக இருக்கும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

செவ்வாய் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். அலுவலக வேலைகளில் மனநிறைவு ஏற்படும். தொழில் தொடர்பான முயற்சிகள் சிறப்பாக இருக்கும். தொழிலில் ஒப்பந்தம் ஏற்படும்.

புதன் -
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகமாக ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.

வியாழன் -
பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சகோதர வகையில் இருந்த வருத்தங்கள் தீரும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி -
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பாக சந்திப்புக்கள் ஏற்படும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரம் தொடர்பாக நீண்ட நாளாக வராமலிருந்த பணம் வந்துசேரும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

சனி -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி லாபமும் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு குடும்ப உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு செய்யுங்கள். தேவைகள் நிறைவேறும். நினைத்தது நடக்கும்.
*************

சுவாதி -

அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும்.

குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.

வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். சகோதரர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும்.

தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். தொழிலில் எதிர்பார்த்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையும் கூடுதல் கவனமும் செலுத்தவேண்டும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்டபடியே செய்து முடிக்கக்கூடிய நாள். அலுவலக வேலையில் அழுத்தங்கள் குறையும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகளில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவி கிடைக்கும். இன்று அது தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

புதன் -
நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். எந்த முயற்சியாக இருந்தாலும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் முற்றிலுமாக அகலும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு திடீர் பணவரவு உண்டு.

வியாழன் -
எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் இன்முகத்தோடு இருக்க வேண்டும். நிதானம் மிக மிக அவசியம்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் தொடர்பாக தள்ளிப்போன சந்திப்பு இன்று நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.

சனி -
தொலைபேசி வழித் தகவல் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். முக்கியமான கடன் பிரச்சினை ஒன்றில் சமாதானம் ஏற்படும். தொழில் தொடர்பாக ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.

ஞாயிறு -
பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் பழுதடைந்த பொருட்களை மாற்றுகின்ற வாய்ப்பும் உள்ளது. அலுவலகப் பணிகளில் இருந்த வேலைகளையும் இன்று செய்து முடிப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வணங்குங்கள். தடைகள் அகலும். நன்மைகள் பெருகும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!



வார நட்சத்திர பலன்கள் - அஸ்தம்சித்திரைசுவாதி (மார்ச் 22 முதல் 28ம் தேதி வரை)Vaara natchatira palangalசுவாதிநட்சத்திர பலன்கள்பலன்கள்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்ஜோதிடம்ஜோதிட பலன்கள்இந்த வார நட்சத்திர பலன்கள்PalangalNatchatira palangalJodhidamJodhida palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x