Published : 22 Mar 2021 10:56 AM
Last Updated : 22 Mar 2021 10:56 AM

வார நட்சத்திர பலன்கள் - மகம், பூரம், உத்திரம் (மார்ச் 22 முதல் 28ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -

முயற்சிகளால் முன்னேற்றத்தைக் காணக்கூடிய வாரம்.

மிகப்பெரிய வாய்ப்புகளைத் தேடி ஓடக்கூடிய நிலை இருக்கும். அந்த வாய்ப்புகள் நிச்சயமாக கிடைக்கும் என்பதை நம்பலாம். பெரிய அளவிலான வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் இருக்கும்.

கணவன்-மனைவி ஒற்றுமை பலமாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணமான தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். கடனில் ஒரு பகுதியை அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சொத்து தொடர்பான விஷயங்களில் சுமுகமான நிலை எட்டும். உத்தியோகத்தில் இயல்பான நிலை இருக்கும். ஒருசிலருக்கு வேலை தொடர்பாக அழுத்தங்கள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இயல்பாக சொத்துச் சேர்க்கை ஏற்படும் திருமண முயற்சிகள் கைகூடும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்கள் என அனைவரும் உங்களுக்கு உதவுவார்கள். உயர்கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் இனி தடையில்லாமல் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானத்திற்கு குறை இருக்காது. சுய தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காணலாம். வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன் -
எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். மன உளைச்சல் ஏற்படும்படியான சம்பவங்கள் நடக்கும். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம்.

வியாழன் -
மனநிறைவு ஏற்படும்படியான நிகழ்வுகள் நடக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

வெள்ளி -
அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. நிதானம் காக்க வேண்டும்.தொழில் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் வேண்டும். வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அலுவலகப் பணிகளில் கூடுதல் வேலைச் சுமை ஏற்படும்.

சனி -
முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாமதமாகிக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஞாயிறு -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அனுமன் வழிபாடு செய்யுங்கள். சிறப்பான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
****************
பூரம் -

எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளிலும் சாதகமான பலன்களை காணக்கூடிய வாரம்.

குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கடன் தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான நிலையை எட்டி ஓரளவுக்கு கடன் தீரும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. எந்தவொரு புதிய முயற்சியில் ஈடுபட்டாலும் சாதகமாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.தொழில் வளர்ச்சியடையும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும்.

பங்கு வர்த்தகத் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சகோதர வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரும். அவர்களுடைய ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மீதான மதிப்பு மரியாதை உயரும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும்.

செவ்வாய் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் செலவுகள் உண்டு. செலவுகளைக் குறைக்க வேண்டும்.

புதன் -
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். சொந்த வீடு வாங்குவதற்கான வீட்டுக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வியாழன் -
அலுவலகப் பணியில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகவல் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். தொழிலில் எதிர்பாராத லாபம் ஏற்படும்.

சனி -
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
**************
உத்திரம் -

நன்மைகள் பலவாறாக நடக்கும் வாரம் இது.

வருமானம் இருமடங்காக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். பாகப்பிரிவினைகள் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்கும் வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் சாதகமான வெற்றியைக் காணலாம். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.

தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முதலீடுகளும் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். சொத்துப் பிரச்சினை சாதகமாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். திருமணம் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

புதன் -
சுபகாரியப் பேச்சுகள் மனநிறைவைத் தரும்படியாக முடிவடையும். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். வியாபார வளர்ச்சியும் லாபமும் அமோகமாக இருக்கும்.

வியாழன் -
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். தொழில் தொடர்பாக வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தால் இன்று நல்ல தகவல் கிடைக்கும்.

சனி -
அலுவலக வேலையில் திருப்தியான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இல்லத்திற்கு அத்தியாவசிய பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்க வேண்டியது வரும்.

ஞாயிறு -
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தாருடன் இணக்கமாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலய வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x