Published : 21 Feb 2021 15:46 pm

Updated : 21 Feb 2021 15:46 pm

 

Published : 21 Feb 2021 03:46 PM
Last Updated : 21 Feb 2021 03:46 PM

மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -


திறமையாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஒரு சிலருக்கு முக்கியமான கடன்களை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. அடகு வைத்த பொருட்களை மீட்க வழி வகைகள் கிடைக்கும்.

சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாகும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த அனைத்து காரியங்களும் இனி முழுமையான வெற்றியை தரக்கூடியதாக மாறும். தாயாரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தந்தையின் உடல்நலம் சீராக இருக்கும். அலுவலக வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முக்கியமானப் பணியை செய்து முடிப்பீர்கள். அதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும்.

இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகளும் சாதகமாக இருக்கும். அலுவலகப் பணிகளை விடுத்து தனியாக தொழில் தொடங்கும் முயற்சியும் ஒரு சிலருக்கு சாதகமாக இருக்கும். அந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இந்த வாரம் கிடைக்கும்.

தொழில், வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் புத்திரபாக்கியம் உண்டாகும் சேதி கிடைக்கப் பெறுவார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டிய வாரமாக இருக்கிறது. கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகப் பணிகளில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இன்று முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும். குழப்பமான மனநிலையில் இருந்தாலும் தெளிவாக முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

புதன் -
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
பயணங்கள் எதுவும் செய்ய வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது.

வெள்ளி -
அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு சகோதர வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

சனி -
தொழில் தொடர்பான சந்திப்புகளில் இழுபறி நீடிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் குறைவாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்தித்து ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களால் தொழில் தொடர்பான ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மகாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். நல்லது நடக்கும்.
*******************

பூராடம் -

நன்மைகள் நடக்கும் வாரம். ஆனாலும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

வரவும் செலவும் சமமாகவே இருக்கும். எனவே சிக்கனம் அவசியம். குடும்பத்தினரின் தேவைகள் அதிகமாக இருக்கும். எனவே செலவுகளும் அதிகமாக ஏற்படும். சகோதர வழியில் ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

நண்பர்கள் தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள். பணி இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவை நடக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரும். எதையும் பொறுமையாகக் கையாள வேண்டும்.

தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஒரு சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டியது வரும். நிதானத்தோடு செயல்பட்டு பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும்.

பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் பிறக்கும், கல்வி தொடர்பாக தேவையான உதவிகள் தேடி வரும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கக் கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பாக பணம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் -
பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக முக்கிய நபரின் உதவி கிடைக்கும்.

புதன் -
குழப்பமான மனநிலை தோன்றும். ஆனாலும், கடைசி நேரத்தில் தெளிவாக முடிவெடுப்பீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பணத்தைக் கையாளும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சுப விசேஷங்கள் முடிவெடுக்கப்படும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.

ஞாயிறு -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். பண உதவிகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். மகிழ்ச்சிகரமான செலவுகள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள், முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
***************

உத்திராடம் -

எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் எண்ணியபடியே நிறைவேறும்.

பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். தந்தைவழி சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான முடிவு ஏற்படும். தாய்வழி உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு தெரியாது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.

எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பித்தல், வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் இறங்கி வெற்றி காண்பார்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும், திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

செயல்களில் நிதானம் தேவை. பொறுமையாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். எந்தவிதமான செயல்களிலும் கவனமாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். பண வரவு தாமதமாகும்.

செவ்வாய் -
பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன் -
தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். பெண்களுக்கு முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று தீர்வதற்கு வழி கிடைக்கும்.

வியாழன் -
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளில் இன்று இறங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் இன்று முடிவுக்கு வரும்.

வெள்ளி -
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி -
மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தெளிவாக சிந்திக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். பொறுமையாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும். தூரத்து உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். நெருங்கிய நண்பர் பண உதவி செய்வார்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!



மூலம்பூராடம்உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரைஉத்திராடம்பலன்கள்வார பலன்கள்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்இந்த வாரம் உங்களுக்கு எப்படி?JodhidamJodhida palangalMoolamPooradamUtthiradamPalangalVaara palangalVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x